வேறு கிளைகளிலும் சேவை வங்கிகளுக்கு கோரிக்கை
Added : ஜூலை 02, 2020 22:58
சென்னை; 'ஊரடங்கின் போது, கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை மட்டுமின்றி, வேறு கிளைக்கு சென்றாலும், சேவை வழங்க வேண்டும்' என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மார்ச் முதல், தமிழகத்தில் ஊரடங்கு அமலாகியுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில், வரும், 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில், வங்கிக்கு சென்று சேவை பெற, மிகுந்த சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் உட்பட, பல்வேறு சேவைகளை பெற, கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டும் என, வங்கி அதிகாரிகள் பொதுவாக அறிவுறுத்துவர்.சாதாரண நாட்களில், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு செல்ல முடியும்.
ஆனால், ஊரடங்கின் போது, தொலைவில் உள்ள வங்கி கிளைகளுக்கு செல்ல முடியவில்லை. பிற கிளைகளுக்கு சென்றால், கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு செல்லும்படி கூறுகின்றனர். இதனால், அவசர தேவைகளுக்கு, வங்கி சேவை கிடைப்பதில், மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.எனவே, ஊரடங்கு முடியும் வரை, வங்கியின் எந்தக் கிளைகளுக்கு சென்றாலும், சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவை, கிளைகளுக்கு நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
your post is a very nice . https://bankingservices.live/bankfive/
ReplyDelete