Added : மார் 04, 2021 21:29
புதுடில்லி:அரசு துறைகளில் இருந்து தேவையில்லாத, 'இ - மெயில்'கள் வருவதாக தொடரப் பட்ட வழக்கில், 'பிடிக்காவிட்டால், 'அன்சப்ஸ்கிரைப்' எனப்படும், வாய்ப்பை பயன்படுத்தி விலகிக் கொள்ளலாம்' என, டில்லி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த, சோய்பால் குப்தா, தன் இ - மெயில் முகவரிக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகள், பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தேவையில்லாத, இ - மெயில் வருவதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.'இந்த இ - மெயில்கள் அனுப்ப வேண்டாம் என, அரசுக்கு இ - மெயில் செய்யுங்கள்' என, நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து, சோய்பால் குப்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, 'உங்களுக்கு பிடிக்காவிட்டால், அன்சப்ஸ்கிரைப் செய்யும் வசதியை பயன்படுத்தலாமே' என, உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment