Friday, March 19, 2021

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்காது

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்காது

Added : மார் 18, 2021 23:14 

சென்னை:தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்காது என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில், திருச்சி, கொடைக்கானல் ரோடு நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரயில் இரு வழியிலும், ஏப்., 2 முதல், கொடைக்கானல் ரோடு நிலையத்துக்கு பதிலாக, திண்டுக்கல்லில் நின்று செல்லும் என, ரயில்வே வாரியம் அறிவித்துஉள்ளது.


தேஜஸ் ரயில் தாம்பரம் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற, பலரின் கோரிக்கையை ரயில்வே வாரியம் நிராகரித்துள்ளது.சென்னை, சிட்லப்பாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரிய கேள்விக்கு, ரயில்வே வாரியம் அளித்த பதிலில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024