Wednesday, March 3, 2021

தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணமா?

தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணமா?

Added : மார் 03, 2021 00:12

சென்னை : ''கொரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்துள்ள, 250 ரூபாய் கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் எச்சரித்துள்ளார்.

நாடு முழுதும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்; 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனுமதிஇதற்காக, அரசு மருத்துவ மனைகளில், 529 மையங்கள்; தனியார் மருத்துவமனைகளில், 761 மையங்கள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில், 250 ரூபாய் வரையும், கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி அளித்துஉள்ளது.இந்நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: முதியோர், நாள்பட்ட நோயாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நன்றாக நடந்து வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது. பொதுமக்களுக்காக, 'கோவின் 2.0' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் பதிவு செய்து விட்டு வரலாம். பதிவு செய்ய தெரியாதவர்கள் அடையாள அட்டையுடன் மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ளவர்கள் செயலில் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்துவர்.சட்ட நடவடிக்கைநாள்பட்ட நோயாளிகள் மட்டும், டாக்டரின் பரிந்துரை சான்றிதழுடன் வர வேண்டும்.

அரசு நிர்ணயித்த, 250 ரூபாய் கட்டணத்தை விட கூடுதலாக, தனியார் மருத்துவமனைகள் வசூலித்தால், அவற்றின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், தடுப்பூசி போடுவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024