ரூ.100 தர மறுத்த பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை
Updated : ஜூன் 27, 2021 20:29 | Added : ஜூன் 27, 2021 20:28 |
ஜார்சுகுடா: 100 ரூபாய் தர மறுத்த சம்பல்பூர் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் துருபராஜ் நாய்க் கோடாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட துர்பா ராஜ் நாய்க், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பல்கலைகழக துணை வேந்தராக பணி ஓய்வுபெற்ற பின், தொலைவில் உள்ள கிராமத்தை தேர்வு செய்து அங்கு வாழ்ந்து வந்தார். மேலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக தனது வட்டாரத்தில், காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்து வந்தார்.சுற்றுச்சூழலுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக ,அவருக்கு பிரகிருதி மித்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜார்சுகுடா மாவட்ட எஸ்பி தாஸ் கூறியதாவது: துர்பா ராஜ் நாய்க்கின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அவரிடம் 100 ரூபாய் கேட்டுள்ளான். அவர் தர மறுத்ததால், கோடாரியால் வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது துர்பா ராஜ் நாய்க்கை வெட்டிய கோடாரி அங்கே கிடந்தது. இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment