Monday, June 28, 2021

பாரீஸ் - சென்னை விமானத்திற்கு வரவேற்பு


பாரீஸ் - சென்னை விமானத்திற்கு வரவேற்பு

Added : ஜூன் 27, 2021 23:33

சென்னை-பாரீஸ் நகரில் இருந்து, முதல் நேரடி விமான சேவையாக, சென்னை வந்த, 'ஏர் பிரான்ஸ்' விமானம் மற்றும் விமான குழுவினருக்கு, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள், சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க, 'ஏர் பபுள்' என்ற, ஒப்பந்தம் செய்து கொண்டன. இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள, 'சார்லஸ் டி கோலே' விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு நேரடி விமான சேவை துவங்க முடிவானது.அதன்படி, பாரீஸ் நகரிலிருந்து, 'ஏர் பிரான்ஸ் - போயிங் 787 - 900' ரக விமானம், நேற்று முன்தினம் காலை 11:35 மணிக்கு, 111 பயணியர், 19 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது.

இந்த விமானம், சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு 12:25க்கு வந்தது. இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் வந்திறங்கிய விமானத்தை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். 'ஏர் பிரான்ஸ்' விமானத்தின், பைலட்டுகள், பணிப் பெண்கள், பொறியாளர்களுக்கு மலர் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இந்த விமானம் நேற்று அதிகாலை 1:20 மணிக்கு, பாரீஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024