இருபது ரயில்கள் மீண்டும் இயக்கம்
Added : ஜூன் 19, 2021 01:39
சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இயக்கப்பட்டு, பயணியர் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட உழவன், மலைக்கோட்டை, கொல்லம், எக்ஸ்பிரஸ் உட்பட, 20 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
* சென்னை எழும்பூர் - தஞ்சை உழவன், திருச்சி மலைக்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் கேரளா கொல்லம் செல்லும் சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்படும்
* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் - திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா, மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாளை முதல் இயங்கும்
* கோவை - நாகர்கோவில், திருவனந்தபுரம் - மதுரை, புனலுார் - மதுரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் இருவழியிலும் இயக்கப்படும்.
No comments:
Post a Comment