ஒரே நாளில் பட்டா வழங்கிய கலெக்டர்
Added : ஜூன் 20, 2021 23:44
தஞ்சாவூர்-வீடு கட்ட விடாமல் உறவினர்கள் தடுத்ததால், பெண் ஒருவர் கண்ணீருடன் அழுது 'வீடியோ' வெளியிட்ட நிலையில், கலெக்டர் 24 மணி நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பட்டத்துாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை, 36; மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். பாஸ்கரன், மலேஷியாவில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர், தன் வீட்டை புதுப்பிக்க முடிவு செய்தார். ஆனால், உறவினர்கள் சிலர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என, மணியம்மையிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர்.
இது குறித்து, 'கலெக்டர்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மணியம்மை கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பரவியநிலையில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிெவர் உத்தரவுப்படி, பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, கிராம புஞ்சை தரிசு வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என பரிந்துரைத்தார்.இதையடுத்து, 24 மணி நேரத்திற்குள் 2.5 சென்ட் வீட்டுமனை பட்டா தயார் செய்து, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிெவர்,நேற்று மணியம்மை வீட்டிற்கு சென்று வழங்கினார்.
No comments:
Post a Comment