சுரப்பா மீதான விசாரணை நிறைவு
Added : ஜூன் 29, 2021 21:44
சென்னை:அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை, கமிஷன் நிறைவு செய்துள்ளது. விரைவில் முதல்வரிடம், அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த சுரப்பா, 280 கோடி ரூபாய் அளவிற்கு, முறைகேடு செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்தது. கமிஷன் விசாரணையை முடித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.கலையரன் கமிஷன், உடனடியாக விசாரணையை துவக்கியது.
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி உட்பட பல்வேறு அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இறுதியாக சுரப்பாவிற்கு, முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அனுப்பி, எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பும் படி 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதை ஏற்று, சூரப்பாவும் பதில் அனுப்பியதாக தகவல் வெளியானது.
கடந்த எட்டு மாதங்களாக நடந்த விசாரணை, தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் விசாரணை அறிக்கையை, நீதிபதி கலையரசன், முதல்வரிடம் சமர்பிக்க உள்ளார்.
No comments:
Post a Comment