'ரஜினிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?'
Updated : ஜூன் 29, 2021 07:08 |
சென்னை : 'அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு தடையுள்ள நிலையில், ரஜினி மட்டும் சிகிச்சைக்காக சென்றது மர்மமாக உள்ளது' என, நடிகை கஸ்துாரி கூறியுள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், கடந்த வாரம் ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. சில வாரம் ஓய்வுக்கு பின், இந்தியா திரும்ப உள்ளார்.
இந்நிலையில், ரஜினி அமெரிக்கா சென்றது குறித்து, நடிகை கஸ்துாரி, 'டுவிட்டரில்' கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: கொரோனா காரணமாக, இந்தியர்கள், மே மாதம் முதல் நேரடியாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பின், எப்படி இந்த நேரத்தில் ரஜினி பயணம் செய்தார்? அவர் அரசியலில் இருந்து விலகியது உள்ளிட்ட எதுவும் சரியாகப் படவில்லை. இதை ரஜினி தான் தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிப்பவர்கள் மட்டும், அமெரிக்கா திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியே தான் அனுமதி கிடைக்கிறது.
ரஜினி, இந்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று பயணித்து இருக்கலாம். இந்தியாவில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில், ரஜினிக்கு சிகிச்சை தர முடியாத அளவுக்கு என்ன பாதிப்பு உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment