Tuesday, June 20, 2017

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே....
பதிவு செய்த நாள்20ஜூன்
2017
00:38




மன்மணம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு;மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை;மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்குமன்மனத்துள்ளே மனோலயம் ஆமேஎன மனதை பற்றி திருமந்திரம் தெளிவாக கூறுகிறது.மனமிருந்தால் மட்டுமே உடலில் உயிருண்டு. அம்மனதால் மகிழ்ந்திருப்போர்க்கு வாழ்வில் மனோலயம் உண்டு.

மனம் எனும் மாயசக்தி
மனம் என்றால் உள்ளம். மனம் என்பது மாபெரும் சக்தி. அது ஒரு மாயசக்தி. எதையும் அதனால் சாதிக்க முடியும். நேர்மறை எண்ணம், எதிர்மறை எண்ணம் என இரண்டையும் மனதால்
உருவாக்க முடியும். இறைவனின் உருவத்தை நேரில் காண இயலாது. அதைப் போன்று மனதின்உருவத்தையும், எண்ணத்தையும் நேரடியாக யாராலும் அறிய முடியாது. உளவியல், அறிவியல் ஆராய்ச்சிகளின்படி மனிதனின் எண்ணம், மரபு, சுற்றுப்புறச்சூழல், மூளை சார்ந்த உயிர் வேதியியல், குடும்பச்சூழல் இவற்றால் மாறுபடுகிறது.'கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்'உள்ளமானது தீயசெயல்களை எண்ணத் தொடங்கினால் அன்றே மனம் கெட்டு விடும் என
திருக்குறள் கூறுகிறது.

மன அழுத்தம் என்ற பாரம்
அழுத்தம் என்றால் பாரம் அல்லது கனம் எனப்படும். பாரம் என்பது சுமை. திணித்தலையும் அழுத்தம் என கூறலாம்.பீலிபெய் சாகாடும் அச்(சு)இறும், அப்பண்டம்சால மிகுத்து பெயின்மெல்லிய மயிலிறகையே அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும். மனதில் துயரம் அதிகமானால் மனமுறிவு ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும். தீர்வு காணப்படாத இன்னல்களாலும், வேலைப்பளுவாலும் மனதில் பாரம் ஏற்றப்
படுகிறது. கட்டுப்பாடற்ற மனதாலும், மன அழுத்தம்தோன்றுகிறது. உலகில் அனை வருமே ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தோடு இருக்கின்றனர். மன அழுத்தத்தின் அளவை பொறுத்து மாற்றுவதற்கு பல திறவுகோல்கள் உள்ளன.

மன அழுத்தத்திற்கான காரணங்கள்

காட்டாற்று வெள்ளம் தறிகெட்டுப் போவது போல் நிலையான சிந்தனை இல்லாதவனின் மனம் கலக்கமுற்று குழம்பி நிற்கும். உறவுகளில் காட்டும் அதிகமான அக்கறை, அக்கறையின்மை இரண்டுமே மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். முன்னர் பள்ளி இறுதித் தேர்வு, நாள் ஒன்றுக்கு இரண்டாக, நான்கு நாட்களுக்குள் முடிந்து விடும். இன்று போதுமான இடைவெளி விட்டு தேர்வுகள் நடந்தாலும், தேவையற்ற மன அழுத்தம்
உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது நடந்தே தீரும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய மூன்று காரணிகள் அச்சம்; கோபம்; பொறாமை.

சூழ்நிலைக்கு ஏற்ப மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் மரியா மாண்டிசோரி கூறுகிறார். சூழ்நிலையை தயாரித்தல் என்ற முறையை குழந்தை முதலே செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மூன்றாண்டிற்குள் குழந்தை சாதித்த அளவை, நாம் சாதிக்க வேண்டுமென்றால் 60 ஆண்டுகள் தேவைப்படும் என்று உளவியல் கூறுகிறது. குழந்தைப் பருவத்திலேயே வளமான மனதை உருவாக்க பயன்தரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று நிலைகள் 

முதல் நிலை: சிறு நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்பே முதல் நிலையாகும். குழந்தை விழுந்தவுடன் ஏற்படும் படபடப்பு; பாம்பை கண்டவுடன் ஏற்படும் பயம்; இவை அனைத்தும் சில மணித்துளிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி பின்பு மறைந்து விடும். இந்நிகழ்வுகளால் அழுத்தம் தோன்றும் பொழுது பாதுகாத்து கொள்வோம். சண்டையிடுவோம் அல்லது விலகி விடுவோம். இதையே ஆங்கிலத்தில் FIGHT OR FLIGHT என கூறுவர். முதல் வகை மன அழுத்தம் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.
இரண்டாம் நிலை: குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து மனதில் பாதிப்பு ஏற்பட்டால் அதுவே இரண்டாம் நிலையாகும். நாமே நமக்குள் ஏற்படுத்தி கொள்ளும் மன அழுத்தம் ஆகும். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்யும் நேரம்; பஸ்சை பிடிக்கும் நேரம்; நிர்வாகத்தில் வேலை செய்யும் நேரம்; இல்லத்தில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நேரம்; தொலைக்காட்சியில் தொடர் நாடகம் பார்க்கும் போது மின்சாரம் தடைபடும் நேரம்; டாக்டர்களிடம் பரிசோதிக்க செல்லும் நேரம் என பல சம்பவங்களால் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இந்த மன அழுத்தம் ஏற்படும். அனைத்து நிகழ்வுகளுக்கும் மனதை தயார் நிலையில் வைத்திருந்தால் மனமே மருந் தாகும்.

இரண்டாம் நிலை மன அழுத்தத்தால் தேவையில்லாத படபடப்பு, நாவறட்சி, வேகமாக மூச்சு விடுதல், அதிகமாக வியர்வை வெளியாதல், தலைவலி, அதிக ரத்த அழுத்தம் போன்ற
இன்னல்கள் ஏற்படும். நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தம் என்பதால் நாமே சரி செய்து கொள்ளலாம்.மூன்றாம் நிலை: மூன்றாம் நிலை மன அழுத்தமே சிக்கலானது. இது நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தமல்ல. பல வகை காரணிகளால் ஏற்படுவது. நம்பிக்கையின்மை, உடற்குறைபாடு, போட்டி மனப்பான்மை, பொருளாதார குறைபாடு, அன்பற்ற சூழல், வாழ்க்கை மாற்றம், தொடர்ந்து வரும் நோய், பாதுகாப்பின்மை கடந்த கால துயரமான சம்பவங்கள் என தொடர் நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நிலைத்திருந்தால் மனதில் பாரம் சிறிது சிறிதாக ஏறி பின்பு சரி செய்ய முடியாத மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலை மன அழுத்தத்தில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளும் மரபுநிலை காரணமாக பின்னால் அவர்களையும் அறியாமல் பாதிக்கப்படுவர்.கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்த பெற்றோர் உடல் தளர்வுற்று உள்ளம் தடுமாறி தனிமைப்படுத்தப்பட்டு மன நோயாளியாக மாறி விடுவார்கள். பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் அன்பையும், ஆதரவையும் நாடுகின்றனர். சீர் செய்ய முடியாத இல்லறத்தில் இருப்பவர்கள் நல்ல வழிகாட்டுதலை தேடுகிறார்கள். கூடிவாழ் கோட்பாட்டை பயன்படுத்தினால் அதுவே அருமருந்து என அமெரிக்க கல்வியாளர் வாஷ்பர்ன் கூறுகிறார். முகம் பார்த்து நலம் காணும்
கூட்டுக்குடும்பம் குறைந்துவிட்டது. முகத்தை கூட காணாது இருக்கும் தனிக்குடும்பத்தில் மனதை காண்பது என்பது அரிது.தனிக்குடும்பத்தில் இருப்பவர்கள் விழா காலங்களில் உறவினர்களுடன் ஒன்று கூட வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் அவர்களுடைய வயது ஒத்தவர்
களுடன் ஒன்று கூடி மனம் விட்டு பேசி மகிழ வேண்டும். அப்போது உறுதியாக மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகி விடும். கூடி வாழ்வது கோடி நன்மையை உருவாக்கும்.
தன்னம்பிக்கை அவசியம்
பிறருடன் ஒப்பிடாமல் எளிய முறை வாழ்வை குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களுடன் பழக்கினால் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை என்பது முக்கிய பண்பாகும். அதற்கு உதாரணம் வில்மா ருடால்ப். நான்கு வயதில் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இளம்பிள்ளை வாதத்தால் முடக்கப்பட்டார். அவருடைய பாதங்கள் தரையில் பதிய வாய்ப்பில்லை என டாக்டர்கள் கூறினர். வில்மா மனதளவில் தன்னம்பிக்கையோடு, தன்னை ஊக்கப்படுத்தி கொண்டு கால்களை தரையில் சிறிது சிறிதாக பதிய வைத்து எட்டெம்பிள் என்ற சிறந்த பயிற்சியாளர் துணையுடன், 1960 ஒலம்பிக் போட்டி யில் 100 மீ, 200 மீ, 400 மீ என மூன்று ஒட்டப்பந்தயங்களில்
தங்கப்பதக்கம் வென்றார்.மனம் என்பது அற்புத சக்தி. அந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம். பறவைகளும், விலங்குகளும் கூட இசைக்கு செவிமடுக்கிறது. மனித மனமும் இசையில் லயித்தால் மனம் காற்றாக மாறி விடும். பாட்டு, பரதம், யோகம் போன்ற கலைகள் மருத்துவ ரீதியாக மனஅழுத்தத்தை குறைக்கிறது.
யோகமும், தியானமும்
உடலுக்கு யோகமும், மனதுக்கு தியானமும் சிறந்தவை. மனிதனின் வியாதியை அளவிட்டு மருத்துவம் செய்ய முடியும். ஆனால் மன வியாதியை அளவிட முடியாது. கண்காணிப்பின் மூலம் அறிய முடியும். மனத்துாய்மையும், செயல் துாய்மையும் இவ்விரண்டும் சேரும் இனத்தின் துாய்மையை பொறுத்தே வரும். இதமான
எண்ணத்தை அறிந்து வளமான மனதை பெறுவோம்.எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
'வாழ்வென்றால் போராடும் போர்க்களமேஒவ்வொரு விடியலும் சொல்கிறதே,
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
மனமே ஓ மனமே நீ மாறி விடு
மலையோ அது பனியோ நீ
மோதி விடு'
அழகான இப்பாடல் வரிகளை ஏற்றால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் வாழ்வு வளம் பெறும்.
-முனைவர் ச.சுடர்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865
இன்ஜி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!

பதிவு செய்த நாள்20ஜூன்2017 02:19

கோவை: ''இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்திய தொழிற்நுட்பக் கல்வி கவுன்சில், தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' எனும், தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே போல், இன்ஜி., படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

கோவையில், நேற்று, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:

மருத்துவப் படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வு நடப்பது போல, இன்ஜி., படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம். இது, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள கவுன்சிலிங் விதிகளுக்கு, சிக்கல் ஏற்படாத வண்ணம், இட ஒதுக்கீட்டை பின்பற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

நுழைவுத் தேர்வு எழுதுவதன் மூலம், தமிழக மாணவர்களுக்கு, வேறு மாநிலங்களில் உள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள், 30 சதவீதத்துக்கும் கீழ், மாணவர் சேர்க்கை நடத்திய, இன்ஜி., கல்லுாரிகள், அடுத்த கல்வியாண்டில், மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாருக்குள்ளாகும் கல்லுாரிகள் மட்டுமல்லாமல், 'ரேண்டம்' முறையில், ஐந்து சதவீத கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பாண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பருவத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கும் முறையிலும், மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளையும் முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெறும். இதன் மூலம், பாடத்திட்டம் சார்ந்த புரிதல், மாணவர்களுக்கு ஏற்படும்.
இது தவிர, உயர்கல்வியில் சேரும், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் உள்ள, பயத்தை போக்கும் வகையில், ஊக்குவிப்பு திட்டம், ஜூலை இறுதியில், அனைத்து கல்லுாரிகளிலும் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5,000 டாக்டர்கள் அங்கீகாரம் செல்லுமா : கவுன்சில் பதவி சண்டையால் சிக்கல்

பதிவு செய்த நாள்20ஜூன்
2017
02:05

மதுரை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., முடித்த ஐந்தாயிரம் பேரின் அங்கீகார சான்றிதழில் மருத்துவ கவுன்சில் தலைவர் செந்திலுக்கு பதிலாக உறுப்பினர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டுள்ளதால், அவற்றின் செல்லுபடித் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.

மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த, டாக்டர்கள் மட்டுமே பணி செய்ய அங்கீகாரம் பெற்றவர்கள். மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் டாக்டர்களில் ஒரு லட்சம் பேர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.

கவுன்சில் உறுப்பினர்களுக்கு இடையே நடந்த பதவி சண்டையில், சில மாதங்களுக்கு முன், தலைவர் பதவியிலிருந்து, டாக்டர் செந்தில் நீக்கப்பட்டார். இது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், உறுப்பினர்கள் சிலர் டாக்டர் பாலகிருஷ்ணனை தலைவராக தேர்வு செய்தனர்.
அவர் கடந்த மாதம் முதல், ஐந்தாயிரம் டாக்டர்களின் அங்கீகார சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் செந்தில் தான் கவுன்சில் தலைவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், டாக்டர்களின் அங்கீகார சான்றிதழ்கள் செல்லுமா என கேள்வி எழுந்துள்ளது. திரும்ப பெற வேண்டும் 

டாக்டர் செந்தில் கூறியதாவது: கவுன்சில் தலைவர் உட்பட டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏழு உறுப்பினர்களின் பதவிகாலம்,
ஜூன் 19ல் முடிவடைந்தது. வரும் தேர்தலை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும். இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
நான் பதவி வகித்த ஓராண்டில், உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால், சட்ட திருத்தம், தவறு செய்த டாக்டர்கள், மருத்துவமனைகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், 'ஆன்லைன்' பதிவு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

எதிர்காலத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்ட
சான்றிதழ்களை, சட்ட ஆலோசனை பெற்று திரும்ப பெற வேண்டும், என்றார்.
தேடல் குழு உறுப்பினர் நியமனம்

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
23:31

அண்ணா பல்கலை துணை வேந்தர் புதிய தேடல் குழுவுக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களின் பிரதிநிதியாக, ஐ.ஐ.டி., கான்பூரின் முன்னாள் இயக்குனர், பேராசிரியர் கே.அனந்தபத்மநாபன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் சுந்தரதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

-நமது நிருபர் -
மொபைல் மூலம் மின் கட்டணம் : தமிழகத்தில் விரைவில் அறிமுகம்

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
21:59

சென்னை: விவசாய மின் இணைப்புக்கு மனு அளித்து, காத்திருப்போருக்கு புதிய சலுகைகள், 

சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டன.

சட்டசபையில், மின் துறை அமைச்சர் தங்கமணி, புதிய அறிவிப்புகள் குறித்து கூறியதாவது:

மொபைல் போன் செயலி மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, விரைவில் அறிமுகமாகும். 112 கி.வா., வரையிலான மின் தேவை உள்ள புதிய ஆலைகளுக்கு, 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இதேபோல், மின் கம்பம் மற்றும் பில்லர் பாக்ஸ், 30 மீட்டர் தொலைவுக்குள் இருந்தால், 24 மணி நேரத்தில், மின் இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் இலவச மின்சாரத்துக்காக, இணைப்பு கேட்டு, விவசாயிகள் பலர் காத்திருக்கின்றனர். அவர்கள், விரைந்து இணைப்பு பெறுவதற்காக, 'தட்கல்' திட்டம் அறிமுகமாகிறது. அதன்படி, 5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய்; 7.5 குதிரைத்திறன் மோட்டார்களுக்கு, 2.75 லட்சம் ரூபாய்; 10 குதிரைத்திறன் மின் மோட்டார்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும், 10 ஆயிரம் பேருக்கு, ஆறு மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்.

இதுபோல், 'ஆப் - கிரிட்' எனப்படும், வழக்கமான மின் கட்டமைப்பில் இணைக்காமல், சூரிய சக்தி மூலம், நீர் பம்புகளை இயக்க முன்வரும் விண்ணப்பதாரர்களுக்கு சலுகை கிடைக்கும். அதன்படி, 5.75 மற்றும் 10 குதிரைத்திறன் மின் மோட்டார் வைத்திருப்போர், சூரிய சக்தி திட்டத்திற்கு மாறலாம். அவர்களுக்கு, தமிழக அரசு, 40 சதவீதம்; மத்திய எரிசக்தி துறை, 20 சதவீதம்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், 30 சதவீத மானியம் கிடைக்கும். விவசாயிகள், 10 சதவீதம் மட்டும் செலுத்தி, இணைப்பு பெறலாம். இது, ஆண்டுக்கு, 1,000 பேருக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன

பதிவு செய்த நாள்20ஜூன்2017 07:07



சென்னை: சென்னை வர வேண்டிய இரு விமானங்கள், பெங்களூரு திருப்பி விடப்பட்டன. கோல்கட்டா, ஐதராபாத்திலிருந்து சென்னை வரவேண்டிய இந்த இரண்டு விமானங்களும் மழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 20) எவ்வளவு?

பதிவு செய்த நாள்
ஜூன் 19,2017 21:54



புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல்,டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.04 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசுகள் குறைந்து ரூ.56.85 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.


ஜிஎஸ்டியால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
2017-06-20@ 04:53:48




புதுடெல்லி: மருந்து நிறுவனங்களில் இருந்து ஸ்டாக்கிஸ்டுகள் மூலம் மருந்து கடைகளுக்கு மருந்து வகைகள் சப்ளை செய்யப்படுகின்றன. மருந்துகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வரி விதிப்புடன் அதிகம். சில வகை மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால், மருந்து ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள இருப்பை குறைத்து வருகின்றனர். ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் உண்டு என்றாலும், நடைமுறை சிக்கலை தவிர்க்க இந்த நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாக, மருந்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் இருப்பு குறைவாக உள்ளது.

ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் மே மாத இருப்பு மருந்து நிறுவனங்களுக்கு ஏற்ப 44 நாட்களில் இருந்து 39 நாள், 26 நாட்களில் இருந்து 38 நாள் என சராசரியாக 10 நாள் வரை இருப்பு குறைந்துள்ளது. 

இதுகுறித்து அகில இந்திய கெமிஸ்ட் மற்றும் டிரக்கிஸ்ட் அமைப்பை சார்ந்தவர்கள் கூறுகையில், தற்போது இருப்பை குறைப்பதால் ஜூலையில் தட்டுப்பாடு ஏற்படாது. தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் கிடைக்குமா என சில சில்லரை விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன. தட்டுப்பாடு மிகச்சிறிதளவு இருக்கலாம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய மருந்து உட்பட அனைத்துக்கும் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த சீன விமானம் காற்று சுழற்சியில் சிக்கி குலுங்கியதால் 26 பயணிகள் காயம்

2017-06-19@ 15:34:32


பெய்ஜிங்: சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சீனாவின் தென்மேற்கு நகரமான கன்மிங் வந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், வான்பரப்பில் காற்று வெற்றிடம் அல்லது காற்று சுழற்சி ஆகியவற்றால் ஏற்படும் அதிர்வுகளால் அதிர்ந்தது. டர்புலன்ஸ் எனப்படும் இந்த காற்று சுழற்சியில் சிக்கி விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதில் விமான பயணிகள் பலர் காயம் அடைந்தனர். மேல்லாக்கர்களில் மோதியும் லக்கேஜ்கள் பயணிகள் மீது விழுந்ததிலும் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதில் 26 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள வெய்போ சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், விமான பயணிகளுக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இரண்டு முறை மிகவும் வலுவான டர்புலன்ஸ்களும், மூன்று முறை லேசான டர்புலன்ஸ்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வாரத்தில் இரண்டாவது முறையாக சீன ஏர்லைன்ஸ் விமானம் இத்தகைய சம்பவத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாளையொட்டி ராகுலுக்கு மோடி வாழ்த்து

2017-06-20@ 03:49:13


புதுடெல்லி; ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ராகுல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளபோதும், அவரது பிறந்த நாளை கட்சி பிரமுகர்கள் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘ராகுல் காந்தி மிகவும் ஆர்வமுடனும் துடிப்புடனும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் நலமும் பெற்று பல ஆண்டுகள் நீடூழி வாழவேண்டும்’’ என்று கூறியுள்ளார். ராகுல்காந்தி, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது பாட்டியிடம் ஆசிபெறுவதற்காக கடந்த 13ம் தேதி வெளிநாட்டிற்கு சென்றார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
10 பேரை ஏமாற்றி திருமணம் செய்த ‘கல்யாண ராணி’ 11வது திருமணத்தின்போது மணக்கோலத்தில் பெண் கைது
2017-06-20@ 03:50:19

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி பெண்ணை மணமேடையில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த பந்தளத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர்முனையில் ஷாலினி பேசினார். அப்போது, தான் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் விரைவில் கேரள உயர் நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு இது 2வது திருமணம் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபருக்கு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலை பந்தளம் அருகே ஒரு கோயிலில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலுக்கு வந்தார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வாலிபர் ஒருவர் ஷாலினியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மணக்கோலத்தில் வருவது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவரின் மனைவிபோல் இருப்பதை கண்ட அவர் நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார். அந்த நண்பர் திருமணம் நடக்க இருந்த கோயிலுக்கு விரைந்து வந்தார். அவரை பார்த்த உடன் ஷாலினி அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து அவர், மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஷாலினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை தெரிவித்தார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பந்தளம் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கோயிலுக்கு விரைந்து மணமகன், மணமகள், அவர்களை சார்ந்த உறவினர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையில் ஷாலினி, திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணம், நகைக்கு ஆசைப்பட்டு இதுவரை 10 பேரை ஏமாற்றி ஷாலினி திருமணம் செய்துள்ளார். ஆரன்முளா, செங்கனூர் காவல் நிலையங்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணத்தாசையால் விபரீதம்

ஷாலினி இதுவரை 10 திருமணம் செய்துள்ளார். ஆனால் ஒரு குழந்தை மட்டும் உள்ளது. சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்துள்ளது. ஆகவே பணம் சம்பாதிக்க இந்த விபரீத வழியை கையாண்டுள்ளார். ‘மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கொடுத்து பலரை தனது வலையில் விழ வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகையுடன் மாயமாகி விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மகனுக்கு ஆடம்பர திருமண விழா : ஜெ., படத்தை மறந்த பெண் மந்திரி
பதிவு செய்த நாள்
20ஜூன்
2017
02:03




திருச்சி: முதல்வர் பழனிசாமி பங்கேற்ற, பெண் அமைச்சரின் மகன் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா மண்டபத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்படாதது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன், ஸ்ரீராம் திருமண நிச்சயதார்த்தம், நேற்று முன்தினம் இரவு, லால்குடி அமிர்தம் மஹாலில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.

ஒட்டகங்கள் : முதல்வரை வரவேற்று, திருச்சி நம்பர் 1 டோல்கேட் முதல் திருமண மண்டபம் வரை கட்சி கொடி, வரவேற்பு பேனர், போஸ்டர் என, தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

பேனர்கள், போஸ்டர்களில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படமும்,
தற்போதைய முதல்வர் பழனிசாமி படமும் இடம் பெற்றிருந்தது. மண்டபத்துக்கு வெளியே, வந்தவர்களை வரவேற்க, இரண்டு யானை, குதிரை, இரண்டு ஒட்டகங்கள் ஆகியவை, நிற்க வைக்கப்பட்டன. மண்டபத்தில் வாசல் முதல் உள் அரங்கம் வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மேடையும், ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமகன் ஸ்ரீராம், இளவரசர் உடையில், சாரட் வண்டியில் மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.மண்டபத்தின் உள்ளே வந்த அவருக்கு, இருபுறமும் இளம்பெண்கள் பூ துாவ, அதன் மேல் நடந்து வந்தார். மொத்தத்தில், நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா அனைத்தும், ராஜ குடும்பங்களில் நடப்பது போல, மிகவும் ஆடம்பராக இருந்தது.

கவலைப்படவில்லை : அதே நேரம், மண்டபத்தின் வாசல் வரைமட்டுமே, ஜெ., படங்கள் இடம் பெற்றிருந்தன. மண்டபத்தில் வாசல் முதல், உள் அரங்கம் வரை எங்கும் ஜெ., படங்களை காணவில்லை. அதை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.'எங்களின் சுவாசம், வாழ்க்கை அம்மா போட்ட பிச்சை' என, ஜெ.,யை வர்ணித்து உருகி, உருகி பேசும் பெண் அமைச்சர் வளர்மதியின் வீட்டு திருமண விழா அரங்கத்தில், பெயருக்கு கூட ஜெயலலிதா படம் இல்லாமல் இருந்தது, விழாவுக்கு வந்திருந்த கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நடுவானில் விமானம் அதிர்வு : 26 பயணிகள் காயம்
பதிவு செய்த நாள்
20ஜூன்2017 02:24

பெய்ஜிங்; காற்று சுழற்சியில் சிக்கி விமானம் குலுங்கியதில், 26 பயணிகள் காயம் அடைந்தனர்.சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து சீனாவின் தென்மேற்கு நகரமான கன்மிங் வந்து கொண்டிருந்தது. அப்போது வான்பரப்பில் காற்று வெற்றிடம் அல்லது காற்று சுழற்சி ஆகியவற்றால் ஏற்படும் அதிர்வுகளால் விமானம் அதிர்ந்தது.”டர்புல்லன்ஸ்” எனப்படும் இந்த காற்று சுழற்சியில் சிக்கி விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதில் விமான பயணிகள் பலர் காயம் அடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் 26 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; பேருந்துகள் நிற்பதை முறைப்படுத்த கோரிக்கை

பதிவு செய்த நாள்
20ஜூன்  2017 00:58

பூந்தமல்லி : பூந்தமல்லியில், நீண்ட நாட்களாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்துகள் நிற்பதை முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையின் முக்கிய பகுதியாக, பூந்தமல்லி உள்ளது. அங்கிருந்து, எந்த இடத்திற்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. வெளியூர், ஆந்திரா, பெங்களூரு, திருப்பதி, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், எந்த நேரமும் நெரிசல் இருக்கும்.பேருந்து நிலையத்திற்குள், இரண்டு பகுதிகளாக நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், அங்கு நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு, வரைமுறையின்றி நிறுத்தப்படும் பேருந்துகள், இஷ்டத்திற்கு நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, பேருந்துகள் திரும்பி செல்ல இடவசதி இல்லாதது, ஆட்டோக்களின் அடாவடி ஆகியவை இதற்கு பிரதான காரணங்களாக உள்ளன.இதனால், 'பீக் ஹவர்' நேரத்தில், பூந்தமல்லி டிரங்க் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அந்த இடத்தை கடக்க குறைந்தபட்சம், 40 நிமிடம் ஆகிறது. 

விடுமுறை நாட்கள், இரவில் இது அதிகரித்து, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:வெளியூர் பேருந்துகள், டிரங்க் சாலை வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், இப்பிரச்னை நீடிப்பது வேதனை அளிக்கிறது. பேருந்துகள் வரைமுறையின்றி நிறுத்தப்படுவதும் மற்றொரு காரணம். ஆட்டோக்களின் அடாவடி அதிகரித்துள்ளது.சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒதுக்கப்பட்ட இடங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தினாலே, நெரிசல் குறையும். இதை செய்ய போக்குவரத்து போலீசார் முயற்சி செய்வதே இல்லை. பல ஆண்டுகள் நீடிக்கும் இப்பிரச்னையை தீர்க்க, இனியாவது அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
நில பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பா?
பதிவு செய்த நாள்

19ஜூன்2017 23:43

சென்னை: நில பத்திரங்களை, டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை என, ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், '1950 முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற தடுப்பு, திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான, பி.ஐ.பி., வெளியிட்ட அறிக்கை:

நில பத்திரங்களை கணினிமயமாக்குதல் மற்றும் அதில் ஆதார் எணணை இணைத்தல் தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலகம் பெயரில், வெளியிடப்பட்டதாக கடிதம் ஒன்று, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். மத்திய அரசு, இதுபோன்ற எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை : புதிய 'ரேங்க்' பட்டியல் வெளியீடு இல்லை
பதிவு செய்த நாள்19ஜூன்2017 22:44

'உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான புதிய 'ரேங்க்' பட்டியலை வெளியிடவில்லை' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.இதில், 90 சதவீத இடங்கள், அரசு டாக்டர்களே பெற்றனர். இதை எதிர்த்து, அரசு சாரா டாக்டர் தொடர்ந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மூன்று நாட்களுக்குள், திருத்தப்பட்ட புதிய, 'ரேங்க்' பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.இதன்படி, 'ரேங்க்' பட்டியலை வெளியிடுவதற்கான கெடு, நேற்றுடன் முடிந்தது. ஆனால், மருத்துவ கல்வி இயக்ககம், புதிய, 'ரேங்க்' பட்டியலை வெளியிடாததோடு, முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், வழக்கு விசாரணைக்கு வரும். அதன் தீர்ப்பை பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்' என்றார்.

டாக்டர்கள் போராட்டம் : உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி, அரசு சாரா டாக்டர்கள், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
போஸ்ட் ஆபீசில் பாஸ்போர்ட்

பதிவு செய்த நாள்19ஜூன்2017 22:41

சென்னை: தமிழகத்தில், வேலுார், சேலம் உட்பட, நாடு முழுவதும், 52 தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 149 பாஸ்போர்ட் சேவை மையங்களை, அனைத்து மாநிலங்களிலும் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில், கடலுார், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய, 11 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைய உள்ளன.


லட்டு, தலைமுடிக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு
பதிவு செய்த நாள்19ஜூன்2017 22:21

திருப்பதி: திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர நிதி அமைச்சர், ராமகிருஷ்ணா தெரிவித்தார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணா கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, அடுத்த மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த புதிய வரி மூலம் லட்டு பிரசாதம் தயாரித்தல், வாடகை அறை, பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், தலைமுடி விற்பனை செய்தல் என அனைத்திற்கும் வரி விதிக்கப்படும். அதனால் லட்டு பிரசாதம், வாடகை அறை உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினோம். அதை ஏற்று, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனை ஆகிய இரண்டிற்கு மட்டும், ஜி.எஸ்.டி., யிலிருந்து விலக்கு அளிக்க சம்மதித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.


வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு குடியுரிமை படிவம் அவசியம் இல்லை

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
22:14




'இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் இனி, 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், 'எம்பார்கேஷன்' அல்லது 'டிப்பார்சர் கார்டு' எனப்படும் குடியுரிமைத்துறை படிவத்தை பூர்த்தி செய்வது அவசியமாக உள்ளது. இந்த படிவத்தில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி மற்றும் வெளியூர் சென்றதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.இதனால், பயணிகள் விமானத்திற்கு செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதை கருத்தில் வைத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜூன், 14ல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடு செல்லும் பயணிகளின் காலதாமதத்தை குறைக்கும் வகையில், 'ஜூலை, 1 முதல், 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பு, விமான பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். மற்றபடி, கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.

இது குறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போதுள்ள நடைமுறையில், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், 'விசா' மற்றும் டிக்கெட் பெற, தங்களை பற்றிய விபரங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், குடியுரிமைத்துறை சோதனையில், சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் சோதனை செய்து, பதிவு செய்யப்படுகிறது. மேற்கூறிய காரணங்களே போதுமென்ற அடிப்படையில், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லையென வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு

பதிவு செய்த நாள்20ஜூன்2017 03:05





தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், விளக்கம் கேட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது; தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கியது. இதனால், வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை குறித்து, எம்.சி.ஐ., விளக்கம் கேட்டு வருகிறது. இதற்கு நேற்று பதில் அளித்த, தமிழக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், 'மாணவர் சேர்க்கையில், தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 20, 2017, 03:07 AM

புதுடெல்லி,

முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6-ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9-ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.

இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டனர்.

மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

விரைவில் விசாரணை

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தமிழக அரசு வக்கீல் விஜயகுமார் தாக்கல் செய்தார்.

மேலும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் பிரதாப் என்ற மருத்துவர் சார்பிலும் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் விமான சேவை மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜூன் 20, 2017, 06:00 AM
சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சில நாட்களாகவே அறிவித்து வந்தது. எனினும் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மாலை வேளைகளில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது.

இந்நிலையில் அதன்படி நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக எழும்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

புறநகர்களில்...

அதை தொடர்ந்து இரவு மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் உள்பட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விமான சேவை பாதிப்பு

சென்னைக்கு நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து 119 பயணிகளுடன் விமானம் வந்தது. பலத்த மழையால் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் கொச்சி, டெல்லி, பெங்களூரூ, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரம் வட்டமிட்டு அதன் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, பெங்களூரூ, கொச்சி, டெல்லி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்களும் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பலத்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன நெரிசல்களில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட சாலைகளில் மழையாலும், தேங்கியிருந்த மழைநீராலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குறிப்பாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து தாம்பரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

Monday, June 19, 2017

திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு - பக்தர்கள் மகிழ்ச்சி...




திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் ஒரே மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான ஆயத்தபணிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஏறக்குறைய 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, அது செய்ய பயன்படும் இடுபொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்டு விற்பனை விலை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது, திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கும் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவுக்கு வழங்கப்படும் இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கை அடுத்து, திருப்தி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வௌிநாடு செல்லும் இந்தியர்களுக்கு 'டிபார்ச்சர் கார்டு தேவையில்லை' - ஜூலை 1 முதல் நடைமுறை\



ஜூலை1-ந்தேதி முதல் வௌிநாட்டு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் விமான நிலையத்தில் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், வௌிநாடு செல்லும் பயணிகள், நீண்ட நேரம் குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌிநாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் இருந்து வௌிநாடு செல்லும இந்தியர்கள் தங்களின் பெயர்,பாஸ்போர்ட் எண், பிறந்ததேதி, எந்த நாட்டுக்கு செல்கிறோம், விமான எண், முகவரி, தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு இருக்கும் ‘ டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கும் முறை ஜூலை 1-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌிநாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும். இதன் மூலம் வௌிநாடு செல்லும் இந்தியர்கள் நீண்ட நேரம் குடியேற்றதுறையில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதேசமயம், வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், இதே போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அவசியம்.

இந்தியாவுக்கு வரும் இந்தியர்கள், தாங்கள் கொண்டுவரும் பொருட்களில் வரிவிதிப்பு உட்படாத பொருட்கள் இல்லை என்பதை யும் தெரிவிக்கும் முறையும் தொடர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சிக்னலும் போடல... கார்டும் ஏறல... பறந்தது ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

2017-06-18@ 02:31:24




* நடுவழியில் 1 மணி நேரம் நிறுத்தம்

* டிரைவர்களிடம் அதிரடி விசாரணை

சேலம்: சேலத்தில் ரயில் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கொடுக்கும் கார்டு ஏறுவதற்கு முன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விதியை மீறி ரயிலை எடுத்துச் சென்ற டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22640) நேற்று வழக்கம்போல் அதிகாலை 1.20 மணிக்கு சேலத்திற்கு வந்தது. அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் நின்றபடி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுக்கும் கார்டு மது என்பவர், கீழே இறங்கி அருகில் பார்சல் அனுப்பும் பெட்டியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதிகளவில் பார்சல்கள் இறக்கி, ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென ரயில் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் கார்டு மதுவால் தனக்குரிய பெட்டியில் ஏற முடியவில்லை. உடனே, நான் சிக்னல் கொடுப்பதற்கு முன் எப்படி ரயிலை எடுத்துச் செல்லலாம்? என வாக்கி டாக்கியில் பேசியுள்ளார். அதையும் இன்ஜினில் இருந்து இரு டிரைவர்களும் கவனிக்கவில்லை. இதனால், ரயில் சேலத்தை கடந்து தின்னப்பட்டியை நோக்கிச் சென்றது. இதையடுத்து நிலைய மேலாளருக்கு கார்டு மது தகவல் கொடுத்தார். உடனடியாக தின்னப்பட்டி ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து, ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். வேகமாக சென்று கொண்டிருந்த ரயில், நடுவழியில் திடீரென ஒரு ஸ்டேஷனில் நின்றதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அந்த பகுதியில், ரயில்களை நிறுத்தி பயணிகளிடம் நகைபறிப்பு சம்பவம் நடந்தது என்பதால் பெண்கள் பீதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின், தின்னப்பட்டிக்கு கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அந்த ரயிலில் வந்திறங்கிய கார்டு மது, ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுத்தார். இதையடுத்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் பற்றி, சேலம் ரயில்வே கோட்ட போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்பட, கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு பச்சை விளக்கை எரியச் செய்து சிக்னல் கொடுப்பதோடு, வாக்கி டாக்கியிலும் புறப்படலாம் என தகவல் கொடுக்க வேண்டும். இத்தகவலை பெற்ற பின்னர் தான், இன்ஜின் டிரைவர்கள் ரயிலை எடுக்க வேண்டும். ஆனால், ரயிலில் கார்டு ஏறாத நிலையில், சிக்னல் ஏதும் பெறாமல் தன்னிச்சையாக டிரைவர்கள் ரயிலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் டிரைவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை நடித்ததில் பிடித்த படம் எது? பதில் சொல்கிறார்கள் வாரிசு நடிகர்கள்!




நேற்று தந்தையர் தினம்...

'சர்வ தேச தந்தையர் தினத்தை' முன்னிட்டு 80 களில் பிரபல நட்சத்திரங்களாகக் கலக்கிய சில நடிகர்களின் வாரிசுகளும், இன்றைய பிரபல நடிகர்களுமான சிலரிடத்தில் அவரவர் அப்பாக்கள் நடித்ததில் இவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் எவை? என கேட்கப் பட்டது. அதில் ஒவ்வொரு வாரிசு நடிகரும் அவரவருக்கு பிடித்த வகையில் சுவாரஸ்யமாகச் சில படங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.



நடிகர் விக்ரம் பிரபுவுக்கு, தன் தந்தை பிரபு நடித்ததில் 'அக்னி நட்சத்திரம்' திரைப்படம் தான் மனம் கவர்ந்த திரைப்படமாம். இயல்பில் வெகு இனிமையானவரான தன் அப்பாவை சற்றே கர்வமும், கோபமும் நிறைந்த அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்து, படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர் மணிரத்னத்தின் மீது விக்ரம் பிரபுவுக்கு எப்போதுமே மிகுந்த பிரமிப்பு உண்டாம்.



'கட்டப்பா' சத்யராஜ் மகனான நடிகர் சிபி ராஜுக்கு அப்பா நடித்ததில் பிடித்த படமென்றால் உடனே நினைவுக்கு வருவது அது அமைதிப் படை அமாவாசை கதாபாத்திரம் மட்டுமே. அந்தப் படம் மீண்டும் எடுக்கப் பட்டால் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் பொறுத்திப் பார்க்கவே முடியாது. அவரே திரும்பவும் அந்தப் படத்தில் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பூர்த்தி அடையும் என்கிறார் சிபிராஜ்.

அமைதிப்படை தவிர அப்பா நடித்ததில் சிபிக்கு மிக இஷ்டமான படம் 'பூவிழி வாசலிலே' அப்பா நடித்த பிற அரசியல் நையாண்டி, புரட்சி, வில்லத் தனம் கலந்த நாயகன், காதல், காமெடிப் படங்களிடையே இந்தப் படம் முற்றிலும் வித்யாசமானது. வாய் பேச முடியாத குழந்தையுடன் அவர் உரையாடுவது மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை என்கிறார் சிபிராஜ்.



இயக்குனரும், பிரபல நடிகருமான பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவுக்கு அவரது அப்பா நடித்த படங்களில் மிகப் பிடித்தமானது என ஒரு சின்ன லிஸ்ட் வைத்திருக்கிறார். அப்பா சர்க்கஸ் பபூன் போல வேடமிட்டு வங்கியைக் கொள்ளையடிக்கும் காட்சியுடன் கூடிய 'ருத்ரா' திரைப்படம், ராசுக்குட்டி, தாவணிக்கனவுகள், விடியும் வரை காத்திரு, டார்லிங்...டார்லிங்...டார்லிங் உள்ளிட்ட திரைப்படங்கள் தன்னால் என்றுமே மறக்க முடியாத திரைப்படங்கள் எனக் குறிப்பிடுகிறார் சாந்தனு பாக்யராஜ். இவற்றுள் தாவணிக் கனவுகளை தன் அப்பாவின் 'பயோ பிக்' வாழ்க்கைச் சித்திரம் என்று சொன்னாலும் தவறில்லை என்கிறார் சாந்தனு.

இந்த நடிகர்களை எல்லாம் அவரவர் அப்பா நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்த படங்களை பட்டியலிட வைத்த இந்த 'சர்வதேச தந்தையர் தினம்' எப்படி வந்தது தெரியுமா?



சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் 3-ஆவது ஞாயிறுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதன்படி இந்த ஆண்டில் ஜூன் 18-ல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தந்தையர் தினம் கொண்டாடப்படுவதின் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது. தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார். தனது தந்தையின் தியாகத்தைப் போற்றும் வகையில் இவர்தான் முதலில் தந்தையர் தினத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் அர்கான்சா மாகாணத்தில் 1882-ஆம் ஆண்டு சோனோரா பிறந்தார். அவருக்கு 16 வயது இருந்தபோது தாய் இறந்துவிட்டார்.

அதன் பிறகு அவரது தந்தை வில்லியம் ஸ்மார்ட், சோனோராவையும் அவருடைய 5 சகோதரர்களையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்.

ஒருமுறை அன்னையர் தினத்தை முன்னிட்டு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் சோனோரா தனது தந்தையுடன் பங்கேற்றார். அப்போது, தன்னையும் தனது சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கிய தனது தந்தையின் தியாகத்தைப் போற்றும் வகையில் தந்தையர் தினத்தை அனுசரிக்க அவர் முடிவு செய்தார். பின்னர், வில்லியம் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தார். தந்தையின் நினைவாக அவரது பிறந்த தினமான ஜூன் 5-ஆம் தேதியை சோனோரா, தந்தையர் தினமாக முதன்முதலில் அனுசரிக்கத் தொடங்கினார்.

தந்தையர் தினம் கொண்டாடும் தனது யோசனையை அமெரிக்க அரசுக்கும் சோனோரா அனுப்பிவைத்தார். முதலில் இரு மாகாண அரசுகள் அவரது யோசனையைப் பரிசீலிக்க குழு அமைத்தது.

பின்னர் காலமாற்றத்தில் ஜூன் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது. அமெரிக்க அரசும் தந்தையர் தினத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.

இப்படித்தான் சர்வதேச தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் வாரத்தில் உலகம் முழுதும் கொண்டாடப் படத் தொடங்கியது.

அது சரி நேற்று நீங்கள் உங்கள் அப்பாவுக்கு சொன்னீர்களா? தந்தையர் தின வாழ்த்துகள்!

சொல்ல மறந்திருந்தால் இன்று கூட சொல்லி விடலாம்.

அப்பாக்கள் மகிழ்வார்கள்.
ஒரு வாரத்தில் காலியாகும் நீர்த்தேக்கங்கள்: தண்ணீர் கவலையில் சென்னைவாசிகள்!

சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு இன்னும் ஒரு வாரத்தில் காலியாக இருப்பதால்,கடும் குடிநீர் பஞ்சத்தை சென்னைவாசிகள் எதிர்நோக்க உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் குடிநீர் தேவையை தீர்ப்பதில் நான்கு நீர்த்தேக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் மற்றும் செங்குன்றம் ஆகியவையே அந்த நீர்த்தேக்கங்களாகும். இவற்றிலிருந்துதான் தினமும் சென்னையின் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கப்படுகிறது.

ஆனால் தற்பொழுது செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களும் தற்பொழுது முழுமையாக வறண்டு விட்டன. மீதமுள்ள செங்குன்றம் நீர்த்தேக்கத்தில் இருந்து மட்டுமே எடுத்து சென்னைக்குஜ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு இருபது மில்லியன் லிட்டர் என்ற அளவில் தற்பொழுது நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுவும் வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே தாங்கும் என்பதுதான் சென்னைவாசிகளின் கவலைக்குரிய விஷயமாகும்.

நேற்றைய நிலையை பொறுத்த வரை குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களிலும் சேர்த்து அவற்றின் மொத்த கொள்ளளவில் ஒரு சதவீதம் மட்டுமே நீர் அளவு இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்த அளவு 41% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையை உத்தேசித்து தமிழக அரசு தற்பொழுது சென்னையை சுற்றியுள்ள கல் குவாரிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை, சென்னைக்கு வினியோகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
வெட்கப்பட, வெட்கப்படுங்கள்! #MondayMotivation #MisterK
பரிசல் கிருஷ்ணா

சந்தோஷ் நல்ல வேலைக்காரன். மூளைக்காரன். அலுவலகத்தின் பெரும்பாலான புராஜெக்ட்களைக் குறித்த நேரத்துக்கு முன்பாக அனுப்பி, பெயர் பெறுபவன். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் அவனது டெஸ்குக்கு முன்தான் நிற்பார்கள்.

ஒரு பெரிய புராஜெக்ட் வந்தது. அதன் தலைமை நிச்சயம் சந்தோஷுக்குத்தான் என்று பலரும் கணித்திருக்க, தலைமை அலுவகத்தில் இருந்து ‘Congrats Mister. K' என்று மிஸ்டர் Kவுக்குச் சென்றது மின்னஞ்சல்.


‘அதெப்படி? மிஸ்டர் K-யும் திறமைசாலிதான். ஆனால் அவனைவிட நான் என்ன விதத்தில் குறை?’ என்று மண்டைகுடையவே மேலதிகாரியைச் சந்தித்துக் கேட்டான் சந்தோஷ்.



”உனக்கே தெரியும் சந்தோஷ். ஏற்கெனவே பலமுறை நானும் சொல்லிருக்கேன். ஒரு மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்னா உன் கருத்தைப் பகிர்ந்துக்கவோ, கேள்வி கேட்கவோ தயங்கற. வெட்கப்படற. அதே மிஸ்டர் K வை எடுத்துக்கோ. சரியோ, தப்போ, கிண்டல் பண்றாங்களோ, பாராட்றாங்களோ அவன் குரல்தான் ஒரு ஹால்ல முதல்ல ஒலிக்குது.

இந்த புராஜெக்ட் முடியற வரை, பல கட்டங்கள் இருக்கு. டிரெய்னிங்ஸ் இருக்கும். மீட்டிங்ஸ் இருக்கும். பல கம்பெனிகள்ல இருந்து ஆட்கள் வருவாங்க. அங்க வெட்கப்படாமப் பேசியே ஆகணும். ‘எதாவது நினைப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க’னு நீ காக்கற அமைதி, நம்ம நிறுவனத்துக்கே பின்னடைவா இருக்கலாம்.. அதுனாலதான்..”

அன்று மாலை மிஸ்டர் Kயுடன் காஃபிஷாப் சென்றான்.

“எனக்கே தெரியுதுடா. ஆனா கூட்டத்துல பேசவே வெட்கமா இருக்கு. ரொம்ப ஷை டைப்பாவே இருந்துட்டேன்” - புலம்பினான் சந்தோஷ்.

“அதெல்லாம் ஈஸிடா” தோளில் கைபோட்டபடி சொன்னான் மிஸ்டர் K. ”மொதல்ல காஃபி ஆர்டர் பண்ணு” என்றான் சந்தோஷைப் பார்த்து.

“எனக்கு ஒரு சாண்ட்விச். ஒரு காஃபி” என்றுவிட்டு பேச்சைத் தொடர்ந்தவனைத் தடுத்து நிறுத்தினான் மிஸ்டர் K.

“என்கிட்ட எதுக்கு சொல்ற? கூப்டு ஆர்டர் பண்ணு”

“எப்பவும் நீதான பண்ணுவ?”

“அதான். நீ பண்ணு இனிமே. புது ஆட்கள்கிட்ட பேசப்பழகு. இதான் ஆரம்பம்”

சந்தோஷ் அழைத்து ஆர்டர் செய்துமுடித்து, ‘பண்ணிட்டேன். இதெல்லாம் பண்ணுவேனே.. இதுல என்ன இருக்கு?” என்றான்.

கடை இளைஞன் சாண்ட்விச் வைத்ததும், ‘என்ன ப்ரோ. டென்ஷனா இருக்கறாப்ல இருக்கு?” என்றான் மிஸ்டர் K. அடுத்த ஐந்து நிமிடங்களில், அந்த இளைஞனின் பெயர், சொந்த ஊரெல்லாம் கேட்டு ஏதோ பல வருட நண்பர்கள் பேசுவதுபோலப் பேசினான். அந்த இளைஞன் சென்றதும், சந்தோஷிடம் திரும்பினான்.

புதியவர்களிடம் பேசு:

“பொது இடங்கள்ல உனக்குத் தேவையானதை மட்டும் சொல்லிட்டு, கம்னு இருக்காத. பேசு. ஆட்டோ, டாக்ஸில ஏறினா பேச்சுக்குடுத்துப் பழகு. அதுவே உன் தயக்கத்தைப் பாதி போக்கும்.

கேள்வி கேள்:

மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்ல ஒருத்தர் பேசி முடிச்சதும், ‘எனி கொஸ்டின்ஸ்?’ம் பாரு. உனக்கு நூறு டவுட் இருந்தாலும் கேட்கத் தயங்காத. தப்பா இருந்தாலும், பேசறவர் கோவிச்சுட்டாலும், சுத்தி இருக்கறவங்க சிரிச்சாலும் பரவால்ல. கேளு. அந்தக் கேள்வி, அந்த அறையில் இருக்கறவங்கள்ல 70% மனசுல இருக்கற கேள்வியாகத்தான் இருக்கும்.

இன்னொருவருக்காகப் பேசு:

பப்ளிக்ல யாரோ க்யூவ மீறி முன்னால் போறாங்க. யாருக்கோ ஒரு இடைஞ்சல் நடக்குது. நமக்கென்னன்னு நெனைக்காம, கேள்வி கேள். பயமோ, தயக்கமோ, வெட்கமோ தேவையே இல்ல இதுல.

நன்றி சொல்:

ஒரு கூட்டம், ஒரு ஆட்டோ பயணம்னு எதா இருந்தாலும் முடியறப்ப முதல் ஆளா நன்றி சொல்லு. அதுக்குத் தயக்கமோ, வெட்கமோ தேவையில்லைதானே? ‘ரொம்ப நல்லா இருந்தது. தேங்க்ஸ்’ அப்டினு பலர் முன்னாடி சொல்றப்ப உனக்குள்ள ஒரு தயக்கச் சங்கிலி அறுபடும்.

இந்த நாலு சிம்பிள் விஷயங்களை மொதல்ல ஆரம்பி. இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள்தான். ஆனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!”


மிஸ்டர் K சொல்லிமுடித்ததும், அவனைக் கட்டிக் கொண்டான் சந்தோஷ். ‘இன்னைல இருந்தே ஃபாலோ பண்றேண்டா..” என்றான் மலர்ச்சியுடன்.

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் குப்பை தேக்கம்| துர்நாற்றம், கொசுத் தொல்லையால் பொதுமக்கள் அவதி

டி.செல்வகுமார்

விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் குப்பைகள் சர்வ சாதாரணமாகக் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்திருப்பதால் கொசு உற்பத்தி பண்ணையாக இக்கால்வாய் மாறிக் கிடக்கிறது.
விருகம்பாக்கம் அருகே சின்மயா நகரில் இருந்து விருகம் பாக்கம் அரும்பாக்கம் கால்வாய் தொடங்குகிறது. அங்கிருந்து எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், பெரியார் பாதை, அண்ணா நெடும் பாதை, சூளைமேடு, மேத்தா நகர் வழியாக 6.4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த கால்வாய் மேத்தா நகரில், நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது.
விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாயை தமிழக பொதுப்பணித் துறை பராமரித்து வந்தாலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சியே அவ்வப் போது பராமரித்து வருகிறது. “மழைக்காலம் நெருங்கும்போது மட்டும்தான் இந்த கால்வாயில் குப்பை கூளங்கள், கட்டிட இடிபாடு கள் அவசர கதியில் அகற்றப்படும். மற்ற காலங்களில் எப்போதாவது தான் குப்பைகள் அகற்றப்படும். அதுவும் அரைகுறையாகத்தான் அகற்றுவார்கள்” என்று புகார் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

சூளைமேடு ஜேப்பியார் பாலி டெக்னிக் அருகே விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாயில் குப்பை களும், கட்டிட இடிபாடுகளும் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவு நீர் தேங்கி, கொசுக் கள் உற்பத்தியாகும் பண்ணையாக இக்கால்வாய் மாறியிருக்கிறது. கோடை வெப்பமும் குறையாத நிலையில் அவ்வப்போது மின்விநி யோகமும் தடைபடுகிறது. இது போன்ற நேரத்தில் கொசுத் தொல் லையால் தூக்கத்தைத் தொலைக் கின்றனர் சூளைமேடு, மேத்தா நகர் மக்கள்.
மேத்தா நகர், சூளைமேடு, அண்ணா நெடும்பாதை, பெரியார் பாதை, ரயில்வே காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. சிறியதும், பெரியதுமாக உணவகங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த விடுதிகள், உணவகங்களின் கழிவுகள், வீடுகளில் சேரும் குப்பை கள், கட்டிட இடிபாடுகள் விருகம் பாக்கம் அரும்பாக்கம் கால்வாயில் சர்வசாதாரணமாகக் கொட்டப்படு வதால், துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் இப்பகுதியின் நிரந் தரப் பிரச்சினைகளாக உள்ளன.
இதுபற்றி புகார் கொடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால், பல்வேறு வகையான காரணங்களைக் கூறி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை முற்றி லுமாகத் தடுத்தால்தான் இப்பகுதியில் துர்நாற்றம், கொசுத் தொல்லை பிரச்சினை முடிவுக்கு வரும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலையம்: செப்டம்பரில் பணிகளை தொடங்க திட்டம்

ஜெ.எம்.ருத்ரன் பராசு

வண்டலூர் அருகே கிளாம்பாக் கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வெளியூர் செல்லும் பேருந்து களுக்காக கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கட்டியது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களுக்கும், வெளிமாநிலங் களுக்கும் இங்கிருந்துதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர அதே பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு பகுதியிலும் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தப் பணியை செய்து முடிக்கும் பொறுப்பு சிஎம்டிஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளாம்பாக்கத் தில் 88 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ள சிஎம்டிஏ, முதல்கட்ட பணிகளை செய்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, செப்டம் பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அதன்பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
சிஎம்டிஏ கண்காணிப்புக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற் றது. அதில் கலந்துகொண்ட வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட அறிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்து நிலையம் வரும் பகுதியில் பிற துறைகளின் கட்டுமானங்கள் ஏதேனும் வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துவருகி றோம். மேலும் பேருந்து நிலையத் துக்கான இணைப்புச் சாலைகள் வசதி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் கோயம்பேடு பகுதியில் நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதிக்கு அருகில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பகுதி வருகிறது. விதிகளின்படி இந்த இடத்தில் கட்டுமானங்கள் செய்யக் கூடாது.
மேலும் இணைப்புச் சாலை அமைக்க வேண்டிய பகுதிகளில் தனியார் நிலங்கள் இருக்கின்றன. இதனால் பேருந்து நிலையம் அமைப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல்களைத் தீர்க்க சிஎம்டிஏ அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாரி குடிநீர் கேட்டு காத்திருப்பு: கட்டண முறையில் 10 நாட்களாகியும் விநியோகிக்காததால் மக்கள் அவதி

ச.கார்த்திகேயன்

கட்டண முறையில் லாரி குடிநீர் வழங்கக் கோரி, சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்து, 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படாததால், பொது மக்கள் கடுமையாக அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டு விட்டன. இதனால் சென்னை குடிநீர் வாரியம் தினந்தோறும் விநியோ கிக்கும் குடிநீரின் அளவை 850 மில்லியன் லிட்டரில் இருந்து, 550 மில்லியன் லிட்டராக குறைத்து விட்டது. தற்போது குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் அளவு குறைக்கப்பட்டு லாரிகள் மூலமே அதிக அளவில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கட்டண முறையிலும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்படுகிறது. லாரி களில் குடிநீர் பெற விரும்புவோர், அந்தந்த பகுதி குடிநீர் நிரப்பும் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய் வோருக்கு 6 ஆயிரம் லிட்டர் ரூ.400-க் கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.650-க் கும் விநியோகிக்கப்படுகிறது. அந்தந்த பகுதி நீர் நிரப்பு நிலை யங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், தலைமை யகத்தில் பதிவு செய்யும் முறை யையும் குடிநீர் வாரியம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், லாரி குடிநீர் கோரி பதிவு செய்வோர், 10 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட, வில்லி வாக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 9-ம் தேதி குடிநீர் கேட்டு பதிவு செய்தோம். 18-ம் தேதி ஆகியும் இன்னும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. குடிநீர் வாரிய அலுவலகத்தில் கேட்டால், போதிய லாரிகள் இல்லை என்றும், பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அத னால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதனால் அத்தியா வசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம்” என்றனர்.

வழக்கால் தாமதம்
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை குடிநீர் வாரியத்திடம் 520 ஒப்பந்த குடிநீர் லாரிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக லாரி நடைகள் அதிகரிக்கப்பட்டு, தினமும் 7 ஆயிரத்து 200 நடைகள் இயக்கப்படுகின்றன. கட்டண குடிநீர் கேட்டு பொதுமக்கள் பதிவு செய்வது அதிகரித்துள்ள நிலை யில், கூடுதலாக ஒப்பந்த லாரி களை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தோம். லாரிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் கூடுதல் லாரிகள் பணிகளைத் தொடங்க இயலாத நிலை இருந்தது.

தற்போது வழக்கு முடிந்துவிட்ட நிலையில், சில தினங்களில் புதிய ஒப்பந்த லாரிகள் பணிக்கு வர உள்ளன. அதன் பின்னர், குடிநீர் கேட்டு பதிவு செய்த 48 மணி நேரத்தில் குடிநீர் விநியோகிக் கப்படும். கூடுதல் லாரிகளுக்காக முதலில் வருவோருக்கு முன்னு ரிமை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஒரே நபர், சில தினங்களில் மீண்டும் பதிவு செய்யும்போது, அவருக்கு முன்பு பதிவு செய் வோருக்கு வழங்கிய பின்னரே அவருக்கு விநியோகிக்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், ஒரே கட்டிடத்துக்கு குடிநீர் கேட்டு பல பதிவுகளைச் செய்கின்றனர். அதில் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுத்தான் குடிநீர் வழங்க முடியும். மற்றவர்களும் தங்கள் பதிவுக்கும் குடிநீர் கேட்கின்றனர்” என்றார்.

ஸ்விஸ் வங்கிகளில் இந்திய டெபாசிட்கள் குறைவு’

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் மிகவும் குறைவு என்று ஸ்விஸ் தனியார் வங்கியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.8,392 கோடியாகும். அதே சமயத்தில் மற்ற நாடுகளில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
ஸ்விட்சர்லாந்தில் வங்கி கணக்கைத் தொடங்குவதை விட சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பகுதிகளில் வங்கி கணக்கு தொடங்குவது மிகவும் எளிது என ஜெனிவாவில் உள்ள வங்கியாளர் ஜான் லாங்க்லோ தெரிவித்தார். அதனால் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் மிகவும் குறைவாக இருக்கும்.


கடந்த 2006-ம் ஆண்டு காலத்தில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.23,000 கோடியாக இருந்தது. அதன்பிறகு இந்தியர்களின் டெபாசிட் குறையத் தொடங்கியது.

Revoke suspension reinstate Petitioner says CAT bench


பேப்பர் கப் என்கிற டேஞ்சர் கப்

2017-06-14@ 14:48:01




நன்றி குங்குமம் டாக்டர்

எச்சரிக்கை

‘உபயோகிக்க எளிதாக, பயன்படுத்தியதும் தூக்கிப் போட்டுவிடும் வசதி கொண்ட பேப்பர் கப்புகள் புற்று நோயையும் உண்டாக்கும் அபாயம் கொண்டவை என்பது தெரியுமா?’ என்று சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்புச் செய்தி ஒன்று வெளியானது.வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு குளிர்பானம் கொடுப்பது முதல் தேநீர் அருந்துவது வரை நம் தினசரி வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் பேப்பர் கப்பில் இப்படி ஒரு ஆபத்தா என்று பொது நல மருத்துவர்அர்ச்சனாவிடம் பேசினோம்...

பேப்பர் கப்புகளில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களைப் பருகக் கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்?‘‘சூடான மற்றும் குளிரான பானங்களை உபயோகிக்கும் வகையில்பேப்பர் கப்புகள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஒருவிதமான மெழுகு கலவையை பேப்பர் கப்புகளில் தடவுகிறார்கள்.காபி, தேநீர் மற்றும் சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. இதனால் சாதாரண வயிற்றுவலியிலிருந்து மோசமான புற்றுநோய் வரை பல்வேறு தேவையற்ற விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.’’

சூடான பானங்களை பேப்பர் கப்புகளில் அருந்துவதால் என்னென்ன பிரச்னைகள் வரும்?‘‘தொடர்ந்து சூடான பானங்களை பேப்பர் கப்புகளில் அருந்துவதால் அவற்றிலுள்ள மெழுகு கரைந்து நம் உடலினுள் சென்று மஞ்சள் காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தவல்லது. குறிப்பாக, பெண்கள் பேப்பர் கப்பைத் தொடர்ந்து உபயோகிப்பதால் பல்வேறு ஹார்மோன் பிரச்னைகள், பருவமடைவதில் சிக்கல், குழந்தையின்மைக் கோளாறு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

குழந்தைகளிடம் இந்த ஹார்மோன் மாற்றங்கள் வேறு வழியில் வெளிப்படலாம். அடம்பிடிப்பது, எதற்கெடுத்தாலும் அழுவது, கேட்டது கிடைக்கவில்லையென்றால் உடனடியாகக் கோபப்படுவது போன்றவை ஏற்படலாம். கிட்டத்தட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு இணையான தீய விளைவுகளையே பேப்பர் கப்புகளும் உண்டாக்குகின்றன.’’தண்ணீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டுமா?‘‘சூடாக இல்லாத பானமாக இருந்தாலும் பேப்பர் கப்புகளில் அருந்தும் பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நாம் பேப்பர் கப்பினுள் பானங்களை நிரப்பிய சில நொடிகளிலேயே அதனுள் இருக்கும் ரசாயனம் பானங்களுடன் கலக்க ஆரம்பித்துவிடுகிறது. சாதாரண தண்ணீரில் கூட இந்த ரசாயனங்கள் கலந்துவிடக்கூடியவை என்று சில நவீன ஆய்வுகள் கூறியிருக்கின்றன.’’

ரசாயனக் கலப்பில்லாமல், மெழுகு கலக்காமல் பேப்பர் கப்புகளைத் தயாரிக்க முடியாதா?

‘‘பேப்பர் கப்புகள் தயாரிக்கப்படும்போது அது பானங்கள் அருந்துவதற்குண்டான வகையில் தடிமனாகவும், பொருட்களைத் தாங்கக்கூடிய வகையில் அடர்த்தியாகவுமே தயாரிக்கப்படுகிறது. அதனால், மெழுகு மற்றும் வேதிப்பொருட்கள் கலக்காமல் பேப்பர்கப்புகள் செய்வது சாத்தியம் இல்லை. ஒருவேளை, மெழுகுப் பொருட்கள், ரசாயனம் எல்லாம் கலக்காத வகையில் பேப்பர் கப்புகள் தயாரிக்கப்பட்டால் நல்லதுதான். அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.’’

பேப்பர் கப்புக்கு மாற்று என்ன?

‘‘உபயோகிப்பதிலும், கையாள்வதிலும் கொஞ்சம் சிரமமானாலும் பழைய வழக்கப்படி கண்ணாடி மற்றும் சில்வர் பாத்திரங்களை உபயோகிப்பதே உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. தேநீர் கடைகளில்தான் இந்த பேப்பர் கப்புகள் அதிகம் புழங்குகிறது என்பதால் கடைகளில் தேநீர் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் அரசு குடியிருப்பில் வசிக்க முடியாது: நீதிமன்றம் திட்டவட்டம்
2017-06-19@ 00:43:56



புதுடெல்லி: பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தகுதியை இழந்துவிடும் நபர், ஊழியர் குடியிருப்பில் (குவார்ட்டர்ஸ்) வசிப்பதை தொடர முடியாது, காலி செய்வதுதான் தீர்வு என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மனித நடவடிக்கை மற்றும் தொடர்பான அறிவியல் நிறுவனத்தில் (இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹியுமன் பிஹேவியர் அண்ட் அலைடு சயின்சஸ் - ஐஎச்பிஏஎஸ்) 1980ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து 26 ஆண்டுகள் சேவை புரிந்த ஊழியர், துரதிஷ்டவசமாக 2006ம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பணியிலிருந்த போது நிறுவனத்தின் ஊழியர் குடியிருப்பில் 1982ம் ஆண்டு தொடங்கி வசித்து வருகிறார்.

நீக்கம் செய்யப்பட்ட பின், வீட்டில் வசிப்பது சட்டப்படி செல்லாது. அங்கீகாரமின்றி வீட்டில் வசிக்க அனுமதி இல்லை. உடனே வார்ட்டர்சில்(நிறுவன குடியிருப்பு) இருந்து வெளியேற வேண்டும், என நிறுவனத்தின் சட்ட அதிகாரி நோட்டீஸ் விடுத்தார். நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர், நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவில் இருந்து காப்பாற்றும்படி, நீதிமன்றத்தை அணுகினார். மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.ஜெயச்சந்திரா தீர்ப்பு வழங்கி நேற்று கூறியதாவது: பணி நீக்க உத்தரவை எதிர்த்து போராட ஐஎச்பிஏஎஸ் சட்ட அதிகாரி உங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார்.

அது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை நீங்கள் முறையிட்ட அனைத்து முயற்சிகளிலும் பணிநீக்கம் உறுதியானது. பணிநீக்கம் உறுதி ஆனதால், ஊழியர் எனும் அந்தஸ்தை இழந்து விடுகிறீர்கள். ஊழியர்களுக்கான குடியிருப்பில் மேலும் தொடர்ந்து வசிக்க உங்களுக்கு அங்கீகாரம் இல்லை. எனவே சட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதி செய்கிறது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே கரூரில் மருத்துவக்கல்லூரி
2017-06-19@ 01:41:45



கரூர், ஜூன் 19: கோர்ட் தீர்ப்புக்கு பிறகே கரூர் மருத்துவக் கல்லூரி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் தலைமை மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கரூர் மருத்துவக் கல்லூரி குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதன் தீர்ப்புக்கு பிறகே அதை எங்கு அமைப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான கட்டிட வசதிகள் உட்பட சில அடிப்படை தேவைகள் குறித்து அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முதற்கட்டமாக 100 பேட்டரி மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பேட்டரி மினி பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாடம் நடத்துவதில் புதிய புதிய உத்திகள்: அசத்துகிறது சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி - நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யும் ஆசிரியர்கள்

வி.தேவதாசன்

எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின் வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும் ஆசிரியர்கள்; மாணவர்கள்.
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றால் இத்தனை காட்சிகளையும் காணலாம். தமிழ் தவிர ஆங்கில மீடிய வகுப்புகளும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூரில், மிகப் பெரும் தனியார் பள்ளிகள் ஏராளம். எனினும் எத்தனைப் பள்ளிகள் இருந்தாலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 596 மாணவர்கள்; 17 ஆசிரியர்கள்; 3 சிறப்பாசிரியர்கள் உள்ளனர். வேறு பள்ளிகளிலிருந்து வரும் புதிய மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டேயிருக்கிறது. விரை வில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஐ எட்டக் கூடும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

“எப்ப பார்த்தாலும் என் பையன் செல்போனி லேயே விளையாடிட்டு இருக்கான்…” எல்லா ஊரிலும் கேட்கும் பெற்றோர்களின் புலம்பல் இது.
“பரவாயில்லை. பசங்கள விளையாட விடுங்க”. இப்படிச் சொல்கிறார்கள் சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

“செல்போன் என்பது இன்று பெரியவர் கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோராலும் சகஜமாகப் பயன்படுத்தப்படு கிறது. சிறுவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் பயனுள்ள வழிகளில் அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் இந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சு.பத்மாவதி.
பாடப்புத்தகங்களில் அன்றாடம் மாணவர்கள் படிக்கும் அத்தனை பாடங்களையும் விளையாட்டுகளாக விளையாட முடியும். இதற்கான ஆயிரக்கணக்கான செயலிகள் (App) கிடைக்கின்றன. அத்தகைய செயலிகளை நாங்கள் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்க இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் மெமரி கார்டு கொண்டு வந்தால், இந்த செயலிகளை பதிவு செய்து கொடுக்கிறோம். தங்கள் வீட்டில் உள்ள செல்போனில் அந்த கார்டை செருகி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். வகுப்பில் நடத்தும் பாடங்களை மீண்டும் வீடுகளில் கேட்க வசதியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஐ பேட் வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்கிறார் பத்மாவதி.

அனிமேஷன் படங்கள்
அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஏராளமான அனி மேஷன் படங்களை ஆசிரியர் சு.சக்திவேல் முருகன் உருவாக்கியுள்ளார். இந்த அனி மேஷன் படங்களை தனது பள்ளியில் மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர்கள் இருவரும் உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போலவே இந்தப் பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும் பலவித திறன்களைக் கொண்டிருக்கிறார்கள்.

காவனூர் புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.

பிரிட்டிஷ் கவுன்சில் விருது
இந்தப் பள்ளிக்கு இன்னும் பல பெருமிதங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி. சார்பில் இந்தப் பள்ளியின் 4 மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். கற்றல், கற்பித் தல் உத்திகள் பற்றி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அளித்த பயிலரங்கில் அவர்கள் பங்கேற்றனர். “பள் ளிக்கு திரும்பிய அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக வகுப் பெடுத்தனர்” என ஆசிரியர் சரஸ்வதி கூறுகிறார்.
சர்வதேச அளவில் சிறந்த பள்ளிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் விருதை 2013-ம் ஆண்டு இந்த அரசுப் பள்ளியும் பெற்றுள்ளது. தரமான கல்வி, மிகச் சிறந்த ஆசிரியர்கள், அறிவார்ந்த மாணவர்களைக் கண்டு அருகேயுள்ள பல தொழில் நிறுவனங்கள் இந்தப் பள்ளிக்கு ஆர்வமாக பல உதவிகளை செய்து வருகின்றன. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனத்தின் ஊதியத்தில் ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு நிறு வனம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசி ரியரை நியமித்துள்ளது. மற்றொரு நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப் பில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கற்பித்தல் உபகரணங்களை வேறு சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

எதிர்கால இலக்கு
“இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்” என்கிறார் தலைமையாசிரியர் அ.கா.ஹமிதா பானு. அவர் மேலும் கூறும் போது, “இந்தப் பள்ளியை மேலும் மேம் படுத்த எங்களுக்கு இன்னும் பல கனவு கள் உள்ளன. பள்ளிக்கென ஒரு ஆடிட் டோரியம், நூலகத்துக்கென தனிக் கட்டிடம், ஆடியோ, விசுவல் வசதிகள் கொண்ட கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை உருவாக்க வேண்டும். இன் னொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தேவைப்படுகிறது. இந்த வசதிகளை உருவாக்க நன்கொடையாளர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும்விட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்துவதே எங்கள் பிரதான இலக்கு” என்றார்.
இவர்களது இலக்கு பெரியதுதான். எனினும் இந்த இலக்கை விரைவிலேயே இவர்களால் எட்டி விட முடியும். அதற்கான எல்லா தகுதிகளும் இந்தப் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளன.
தங்கள் பள்ளியை எப்படியெல்லாமோ மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் சுமந்து திரிகிறார்கள். ஆனால் அந்த கனவுப் பள்ளியை எவ்வாறு உருவாக்குவது என்ற வழிமுறையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இன்னொரு பக்கம், ‘அரசுப் பள்ளியில் இவ்வளவுதான் முடியும்; இதுக்கு மேலே எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லும் ஆசிரியர்களும் பலர் உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் அனைவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒருமுறையேனும் அவசியம் சென்று வர வேண்டும்.
தந்தையர் தினத்திற்கு இந்த கேட்ஜெட்களை பரிசளிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்? 

#FathersDay

ஞா.சுதாகர்




பாராட்டுக்கு மட்டுமல்ல... பாசத்திற்கும் அடையாளமாக விளங்குவது பரிசு. அன்பின் அடையாளமாக, வாழ்த்தின் வடிவமாக ஒருவருக்கு அளிக்கப்படும் பரிசானது வெறும் பொருளாக மட்டும் அவரிடம் நிலைகொண்டிருப்பதில்லை; நினைவுகளாகவும் நிலைகொண்டிருக்கும். அப்படி இனிய நினைவுகளை உங்கள் தந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே, இன்று இந்தியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இளைஞர்கள் தற்போது எப்படி மாறியிருக்கார்களோ, அதைப்போலவே தந்தைகளும் காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். காலையில் மகனையோ, மகளையோ பள்ளிக்கு அனுப்பவதே தந்தைகளுக்கு டென்ஷனாக இருந்த காலம் போய், இன்று நகரின் நம்பர் 1 பள்ளியில் சீட் வாங்கவே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய அப்பாக்கள். 'கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்' என எழுதி பசையொட்டி அனுப்பின இன்லான்ட் லெட்டர் காலத்து அப்பாக்களும், தற்போது "பசங்க போன் பண்ணாலே அட்டெண்ட் பண்ண மாட்டின்றாங்க!" எனப் புலம்பும் பவர் பாண்டிகளாக மாறிவிட்டார்கள். இப்படிப்பட்ட அப்டேட்டட் அப்பாக்களுக்கு பரிசளிக்க, இந்த கேட்ஜெட்களை நீங்கள் பரிசீலிக்கலாம்!


1. ஃபிட்பேண்ட்:



ஃபிட்னஸ் மீது அக்கறை கொண்டவர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த ஃபிட்பேண்டுகள்தான். காலையில் வாக்கிங், ஜாக்கிங், யோகா முதல் இரவில் ஸ்லீப் ட்ராக்கிங், ஹார்ட்ரேட் மானிட்டர் வரை, ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ள கேட்ஜெட் இது. இதில் அதிக விலைகொண்ட ஃபிட்பேண்டுகள் இருந்தாலும், குறைந்தது 2,000 ரூபாயிலேயே நல்லதொரு ஃபிட்னஸ் பேண்டை வாங்கிவிடலாம்.

2. இயர்போன்:

வானொலி முன்னால் அமர்ந்து வால்யூமைக் கூட்டிக்குறைத்து பாட்டு கேட்டதெல்லாம் தற்போது பழங்கதையாகிவிட்டது. ஐபாட், எம்.பி 3 ப்ளேயர்கள், மொபைல்கள், ஆன்லைன் இசை தளங்கள் என 'மியூசிக்' மொத்தமும் நம் கைக்குள் அடங்கிவிட்டது இசை. இப்படி அனைத்து வகையிலும் இசை கேட்க உதவும் முக்கியமான சாதனம் இயர்போன். காலையில் நாள் துவங்குவதில் இருந்து இரவில் நாள் முடியும் வரை பெரும்பாலனோருடன் பயணிப்பது இயர்போன்தான். எனவே இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப க்யூட்டான இயர்போன்களை வாங்கி பரிசளிக்கலாம். ஒவ்வொரு முறையும் அது உங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். இயர்போன் வேண்டாம் என்றால் அடுத்தது, ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் நல்ல சாய்ஸ்.



3. கிண்டில்:

உங்கள் அப்பா மொபைல் அல்லது டேப்லட் போன்றவற்றில் இ-புக் படிப்பவராக இருந்தால், யோசிக்கவே வேண்டாம். அவருக்கு கிண்டில் சரியான கிஃப்ட். ஏராளமான நூல்களை சேமித்து வைத்துக்கொள்ளவும், எளிதில் எங்கே வேண்டுமென்றாலும் எடுத்து சென்று படிக்கவும் கிண்டில்கள் மிக உதவும். கிண்டில்களில் பலவகை உண்டு. அதில் உங்கள் விருப்பம், பட்ஜெட், தரம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு வேண்டியதை முடிவு செய்யலாம்.




4. மொபைல்:

நல்ல ரேம், சூப்பர் கேமரா, மீடியம் டிஸ்ப்ளே என 10,000 ரூபாய்க்குள்ளாகவே நல்ல நல்ல மொபைல்கள் வரத்துவங்கிவிட்டன. இதுநாள் வரை நீங்கள் பயன்படுத்திய மொபைல்களை மட்டுமே அப்பாவுக்குத் தருபவராக இருந்தால் ஒரு சேஞ்சுக்கு, இப்படி புது மொபைல்களை பரிசளிக்கலாமே!

5. ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்கள்:

சாதாரண டிவிக்கு கேபிள் கனெக்ஷன், எல்.இ.டி டிவிக்கு டி.டி.ஹெச் கனெக்ஷன் எனப் பிரித்து தருவது போல, தற்போது மொபைலுக்கும் வந்துவிட்டது ஸ்ட்ரீமிங் சேவைகள். அமேசான் ப்ரைம், ஜியோ டிவி, நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் என பல மொபைல் ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்கின்றன. இவற்றில் ஹாட்ஸ்டார், ஜியோ டிவி போன்றவை இப்போதைக்கு இலவசம்தான். ப்ரீமியம் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். இவற்றை உங்கள் அப்பாவுக்கு இன்ஸ்டால் செய்து தரலாம். இன்னும் அதிகமான நிகழ்ச்சிகள், படங்கள் போன்றவற்றை விரும்பினால் அவற்றிற்கு ஒரு வருட சந்தா செலுத்தலாம். இவற்றின் விலை மிகவும் குறைவே! ;-)

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
சீருடைக்குப் பணம் செலுத்த முடியாததால் பள்ளியே ஆடைகளைக் களைந்த பரிதாபம்! 

ஞா. சக்திவேல் முருகன்

பீகார் மாநிலம் சிக்ராலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி பி.ஆர். எஜூகேஷன் அகாடமி. இந்தப் பள்ளி தனது பள்ளி மாணவர்களுக்குக் கட்டண அடிப்படையில் சீருடை வழங்கி இருக்கிறது. இரண்டு மாணவிகள் சீருடைக்கு பணம் செலுத்தாததால் அவர்களின் உடைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16.06.2017) நடந்திருக்கிறது.





பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சகோதரிகள். ஒருவர் முதல் வகுப்பிலும், மற்றொரு மாணவி இரண்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். இவர்களது தந்தை சாஞ்சன் சாஹ் வெள்ளிக்கிழமை மகள்களை அழைக்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பு ஆசிரியையோ, உடனடியாக சீருடைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு மகள்களை அழைத்துச் செல்லும்படி சொல்லி இருக்கிறார். சாஹ் இரண்டு பெண் குழந்தைகளின் சீருடைக்கான பணம் செலுத்துவதற்கு கொஞ்சக் கால அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது கண் முன்னாலேயே, அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் ஆடைகளையும் களைந்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

சாஹ், வழி தெரியாமல் காவல் நிலையத்தை நாடி இருக்கிறார். இவரது கதறலில் காவல்துறை பள்ளியின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. 'இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வரையும், வகுப்பு ஆசிரியையும் கைது செய்து இருக்கிறோம்' என்கிறார் காவல் துறை அதிகாரி ராஜேஷ்குமார். மாநில கல்வி அமைச்சர் அஷோக் சௌத்ரி 'இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்து பள்ளியின் மீதும், சம்பந்தப்பட்டவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி இருக்கிறார்.

நாடு கல்வியில் முன்னேறி என்ன பயன்... கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மாற வேண்டாமா?
சினிமா பாணியில் ஆசிரியையை கடத்திய கும்பல் கைது.. திருச்சி போலீஸ் அதிரடி

சி.ய.ஆனந்தகுமார் தீக்‌ஷித்

திரைப்பட பாணியில் ஆசிரியை ஒருவரை கடத்திய கும்பலை 7 மணிநேரத்தில் திருச்சி போலீஸ் கைது செய்துள்ளது.

திருச்சி டி.வி.எஸ் டோல்கட் அருகில் உள்ள என்.எம்.கே நகர் 2-வது தெருவில் வசித்து வரும் துரைராஜ் என்பவருக்கு முத்துக்குமார், தனலெட்சுமி உள்ளிட்ட இரு பிள்ளைகள். அதில் தனலெட்சுமி, திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள கமலா நிக்கேத்தன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.00 மணியளவில், முத்துக்குமார், அவரது தங்கை தனலெட்சுமியை அவர் பணிபுரியும் பள்ளிக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்றார்.





அப்போது, பள்ளிக்கு அருகில் இன்டிகோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை மறித்து தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் மீது மிளகாய்ப் பொடியை தூவினார். அடுத்த சில நொடிகளில் காரில் மறைந்திருந்த மூன்றுபேர், பள்ளி ஆசிரியை தனலெட்சுமியை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதோடு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஆசிரியையின் அலறல் சத்தம் அப்பகுதியில் மட்டுமல்லாமல், திருச்சி மத்திய பேருந்துநிலையம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி ஆசிரியை கடத்தப்பட்டதாக தகவல் பரவ கூடுதல் பரபரப்பு உண்டானது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆசிரியை தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். அடுத்த சில மணிநேரங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் எஸ்.ஐ அலாவுதீன், சந்துரு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில், ஆசிரியை தனலெட்சுமியை கடத்தியது தனலெட்சுமியின் முறைமாமனான கஜேந்திரன் மற்றும் அவனது நண்பர்கள் என்பது தெரியவந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள மேலதிருப்பந்துருத்தியைச் சேர்ந்த கஜேந்திரன். கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்ததும், கடந்த ஆறுமாதத்துக்கு முன்பு வரை, தனலெட்சுமியின் வீட்டிலேயே குடியிருந்து வேலைக்குச் சென்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், கஜேந்திரன் தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, அவரை பெண் கேட்டதும் தெரிந்தது.

இதனையடுத்து தனலெட்சுமிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில், தனது காதலுக்கு தனலெட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த கஜேந்திரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து தனலெட்சுமியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், கஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, சிக்னல் திருவாரூர் மாவட்டம் திருவிடைவாசல் கொரடாச்சேரியில் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். மதியம் 1 மணியளவில் கொரடாச்சேரி வழியாகச் சென்ற கடத்தல் காரை தனிப்படை போலீசார் வழிமறித்தனர்.

அதையடுத்து காரில் இருந்த தனலெட்சுமியை மீட்டதுடன், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி என்.எம்.கே. காலனியைச் சேர்ந்த துவாரகன், மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த முகமது நசீர், தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது கஜேந்திரன் தப்பியோடினார். ஆனாலும், போலீசார் விரட்டிப்பிடித்தனர். ஆசிரியை தனலட்சுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்ததில், கஜேந்திரன் தனது அத்தை மகள் தனலெட்சுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தேன் என்றும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால், தனது நண்பர்கள் உதவியுடன் தனது அத்தை மகள் தனலெட்சுமியை கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கஜேந்திரன் உள்பட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Want timely info on outbreaks in China: India to WHO

Want timely info on outbreaks in China: India to WHO  DurgeshNandan.Jha@timesofindia.com 05.01.2025 New Delhi : India has upped its vigil a ...