Tuesday, June 20, 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை : புதிய 'ரேங்க்' பட்டியல் வெளியீடு இல்லை
பதிவு செய்த நாள்19ஜூன்2017 22:44

'உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான புதிய 'ரேங்க்' பட்டியலை வெளியிடவில்லை' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.இதில், 90 சதவீத இடங்கள், அரசு டாக்டர்களே பெற்றனர். இதை எதிர்த்து, அரசு சாரா டாக்டர் தொடர்ந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மூன்று நாட்களுக்குள், திருத்தப்பட்ட புதிய, 'ரேங்க்' பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.இதன்படி, 'ரேங்க்' பட்டியலை வெளியிடுவதற்கான கெடு, நேற்றுடன் முடிந்தது. ஆனால், மருத்துவ கல்வி இயக்ககம், புதிய, 'ரேங்க்' பட்டியலை வெளியிடாததோடு, முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், வழக்கு விசாரணைக்கு வரும். அதன் தீர்ப்பை பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்' என்றார்.

டாக்டர்கள் போராட்டம் : உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி, அரசு சாரா டாக்டர்கள், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...