தேசிய செய்திகள்
முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜூன் 20, 2017, 03:07 AM
புதுடெல்லி,
முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6-ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9-ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.
இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவு
இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டனர்.
மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.
விரைவில் விசாரணை
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தமிழக அரசு வக்கீல் விஜயகுமார் தாக்கல் செய்தார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் பிரதாப் என்ற மருத்துவர் சார்பிலும் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment