Tuesday, June 27, 2017

விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!

தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த யூபிஐ சேவையின் மூலமாக மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டு வங்கி கணக்கு இடையில் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.

எஸ்பிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தகவல் பரிமாற்ற செயலி நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இப்போது இந்தியாவில் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய தேசிய பரிவர்த்தனை கார்ப்ரேஷன் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் வாட்ஸ்ஆப் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எளிதான பணப் பரிமாற்ற சேவை

2016-ம் ஆண்டு முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களால் தேசிய பணப் பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் யூபிஐ. இந்தச் செயலியின் உதவியுடன் எளிதாக இரண்டு வங்கி கணக்குடன் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.▪கணினிகல்வி▪
யூபிஐ செயலியை அனைத்து முக்கிய வங்கிகளும் தங்களது இணையதளச் செயலிகள் மட்டும் இல்லாமல் தனியாக ஒரு செயலியாகவும் வழங்கி வருகின்றன. வாட்ஸ்ஆப் நிறுவனம் வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இந்தச் சேவையைத் தங்களது பயனர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இது எப்படி வேலை செய்யும்?

எப்படி ஒரு செய்தி இரண்டு மொபைல் எஙளுக்கு இடையில் அனுப்பப்படுகின்றதோ அதே போன்று யூபிஐ செயலி மூலமாக இரண்டு வங்கி கணக்கு இடையில் மொபைல் எண், மின்ஞ்சல் முகவரி போன்ற விர்ச்சுவல் முகவரி பயன்படுத்திப் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும்.

ட்ரூகாலர்
வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த முயலும் அதேபோன்ற ஒரு சேவையை ட்ரூகாலர் நிறுவனம் ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வழங்கி வருகின்றது.

ஹைக்
ஹைக் மெசெஞ்சர் செயலியும் யெஸ் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை வழங்கி வருகின்றது SBI வங்கியின் வால்லெட் உரிமம் மூலமாக இந்தச் சேவை வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பு குறித்து அச்சம்
மொபைல் மூலமாகத் தகவல் அனுப்பும் செயலிகளும் பணப் பரிமாற்ற செய்யும் சேவையை அளிக்கும் போது பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏதேனும் எழ வாய்ப்புள்ளது என்று வங்கி நிறுவனங்கள் அச்சப்படுகின்றன.

எவ்வளவு பாதுகாப்பானது இது?
வாட்ஸ்ஆப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் மூலமாகப் பரிவர்த்தனை செய்யப்படும் போது பேமெண்ட் கேட்வே பொன்றப் பாதுகாப்பு வழிகளின் உதவியுடன் நடைபெறுமா என்று விவாதிக்கப்பட்டு வருகின்றது.

கூடுதல் விவரங்கள்

2016-2017 நிதி ஆண்டில் மட்டும் 17.8 மில்லியன் யூபிஐ பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் 200 மில்லியன் பயனர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில் யூபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டால் வேகமாக இதன் வளர்ச்சி இருக்கும்.

courtesy: SSTA

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...