Wednesday, June 28, 2017

'பிசியோதெரபிஸ்ட்' கவுன்சில் அமைக்கப்படுமா : கிடப்பில் போடப்பட்ட அரசாணை
பதிவு செய்த நாள்28ஜூன்
2017
00:38

மதுரை: 'கடந்த 2008ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, பிசியோதெரபிஸ்ட்களுக்கு தனி கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ துறையில் டாக்டர்கள், செவிலியர்கள், 'பார்மசிஸ்ட்' போன்றோருக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும், தனித்தனி கவுன்சில்கள் உள்ளன. இவை அந்தந்த துறையை சேர்ந்தவர்களை அங்கீகரிப்பது, விதிமுறைகள் வகுப்பது, சலுகைகள் பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

ஆனால், நாடு முழுவதும், பல லட்சம் 'பிசியோதெரபிஸ்ட்'கள் இருந்தும் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், அவர்களுக்கு கவுன்சில் அமைக்கவில்லை. இந்நிலையில், 'பிசியோதெரபிஸ்ட்கள்' உரிமையை பாதுகாக்க தமிழகத்தில் உடனடியாக கவுன்சில் அமைக்க வேண்டும் என இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் கிருஷ்ணகுமார் கூறிய தாவது: 'பிசியோ
தெரபி' உடல் இயக்க, நரம்பியல் குறைபாடுகளை சரி செய்யவும், அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதியோர்களின் உடல் நிலையை பேணுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நகர்புறங்களில் கட்டண சேவையாக கிடைத்தாலும், கிராமப்புற மக்களுக்கு சென்றடையவில்லை.
கவுன்சில் இல்லாததே, இச்சிகிச்சை முறைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தொய்விற்கும், 'பிசியோதெரபிஸ்ட்'களை அங்கீகாரம் பெறாதவர்களாக நடத்தும் அவலத்திற்கும் காரணமாகும்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 2008ல் 'பிசியோதெரபிஸ்ட்'களுக்கு தனி கவுன்சில் அமைக்க மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால், இன்றுவரை அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய அ.தி.மு.க., அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுக்கிறது. இது குறித்து முதல்வர் பழனிசாமியை சந்திக்கவுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...