ஏழுக்கு ரெண்டு... ஜாமீன் விஷயத்தில் கொந்தளிக்கும் கர்ணன் குடும்பம்..!
எஸ்.கிருபாகரன்
தனிப்பட்ட ஒருவரைப் பழிதீர்க்க அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகள்கூட காற்றில் பறக்கவிடப்படுவதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் குடும்பம் கொதிப்பில் உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்ததோடு அதைப் பிரதமர் ஜனாதிபதி மற்றும் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிவைத்தார். அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் எனக் காத்திருந்தவருக்கு அதிர்ச்சிதான் பதிலாக கிடைத்தது. அவரளித்த புகார்கள் பூமராங் போல அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டன. அடுத்தடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 6 மாத தண்டனை வழங்கியது. இப்போது கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் நீதிபதி கர்ணன்.
பரபரப்பு ஏற்படுத்திய கர்ணனனின் கைது விவகாரத்தில், உச்சநீதிமன்றம் காழ்ப்புணர்வோடு வழக்குத் தொடர்ந்ததாக நீதிபதி கர்ணனனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு நீதிபதி அவரது சக நீதிபதிகள் மீது ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களைச் செவிமடுக்காமல், உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு சொன்னவரையே கைது செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்கின்றனர் நீதிபதி கர்ணனின் குடும்பத்தினர். கர்ணனனால் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களைக் காப்பாற்ற அவசர அவசரமாகக் கைதுப்படலத்தை அரங்கேற்றி அவரை மன உளைச்சலுக்குள்ளாக்கி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நீதிபதி கர்ணன் தற்போது நெஞ்சுவலியினால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம், அவரது மகன் அவரைச் சென்று சந்தித்தார். ஏற்கெனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சில பிரச்னைகளால் உடல்நலம் பாதித்திருந்தவருக்கு இந்த கைது நடவடிக்கை இன்னும் கூடுதல் மன அழுத்தத்தையும் தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னைவிடவும் மனமும் உடலும் சோர்ந்து காணப்படுகிறார் என்கிறார்கள். இதனிடையே கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 'கர்ணனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது கர்ணனின் குடும்பத்தினரை இன்னும் வேதனைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கர்ணனின் சகோதரரும் வழக்கறிஞருமான அறிவுடைநம்பியிடம் பேசினோம்.
“என் சகோதரர் கர்ணன் எந்தக் கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. எந்த வழக்கு தொடர்பாகவும் அவர் மீது எந்த காவல்நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் இல்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் உள்ளது. ஆனால் அவசர அவசரமான அவரைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்தியாவில் ஒரு நீதிபதியை ஒரு சாதாரண நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இத்தனை சீக்கிரம் கைது செய்தது இதுதான் முதன்முறை. பல பெரிய வழக்குகளில் தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டபின்னும் கூட பல வருடங்கள் அது தள்ளிப்போன நடைமுறைகள் நீதிமன்ற வரலாற்றில் உண்டு. தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதி ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பு எத்தனை காலம் கடந்து வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சாதாரண நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் காட்டிய விறுவிறுப்பு நீதிமன்ற வரலாற்றில் இதுதான் முதன்முறை. நீதிபதிகளின் மீதான குற்றச்சாட்டை அவர் பத்திரிகைகளை அழைத்தோ, அதிகாரபூர்வமற்ற தனிநபர்களிடமோ தெரிவிக்கவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை செயலாளர் இவர்களுக்குதான் சட்டப்படி எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கு அவருக்குச் சிறைத்தண்டனையைப் பரிசளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியிருக்கிறது. அதை யாரும் பறிக்கமுடியாது. ஆனால் ஒரு நீதிபதியை நீதிமன்ற பணிகளில் இருந்தே ஒதுக்கிவைத்தது உச்சநீதிமன்றம். அவரது உத்தரவுகளைப் பின்பற்றக்கூடாது எனப் பகிரங்கமா உத்தரவு போட்டது. இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்காக இத்தனை குரோதமாக நடந்துகொள்ளும் உச்சநீதிமன்றம், ஒரு நீதிபதியின் மீது நடவடிகை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை வசதியாக மறந்துவிட்டது. உண்மையில் அவரது பணியில் அவருக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்காவிட்டால் அவர் சுதந்திரமாக அவரது பணியைப் பார்த்திருப்பார். அவரது கவனம் முழுவதும் நீதிமன்றப்பணியில் இருந்திருக்கும். இத்தனை பிரச்னை எழுந்திருக்க வாய்ப்பிருக்காது. இப்படி அவரைத் தொந்தரவு செய்தே பிரச்னையை ஊதிப்பெருக்கவிட்டார்கள்.
இப்போது ஜாமீன் விஷயத்திலும் அதே போக்கைக் கடைப்பிடித்திருப்பது வேதனையைத் தருகிறது. கடந்த வாரம் எங்களது வழக்கறிஞர் மேத்யு, உச்சநீதிமன்றத்தில் எங்கள் சகோதரருக்கு ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். டிஸ்சார்ஸ் மனுவைத் தள்ளுபடி செய்ததில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் கொடூரமான குற்றவாளிக்கும் கூட சட்டம் வழங்கியிருக்கும் ஜாமீன் பெறும் உரிமையை என் சகோதரர் விஷயத்தில் மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனுவின் மீதான விசாரணையில், “7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவருக்கு தண்டனை வழங்கியிருப்பதால் நாங்கள் 2 பேர் கொண்ட அமர்வு அதை விசாரித்து ஜாமீன் அளிப்பது முறையாக இருக்காது” எனச் சட்டத்தில் இல்லாத ஒன்றை தெரிவித்து நீதிபதிகள் ஜாமீன் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தில் அப்படியான நெறிமுறை எதுவும் கிடையாது. ஒரு சாதாரண ஜாமீன் விஷயத்தில் உச்சநீதிமன்றம் இத்தனை கெடுபிடி காட்டுவது ஏன்....நீதிபதி கர்ணனை வெளியில் விட்டால் அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப்பற்றி அவர் இன்னும் ஆதாரத்துடன் வெளியில் பேசுவார் என அஞ்சியே உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.
ஒரு முன்னாள் நீதிபதி என்பதைவிடவும் அவர் ஒரு 60 வயதைக்கடந்த மூத்த குடிமகன். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளி. இத்தகைய ஒருவரை, கைது வரை சென்று அலைக்கழிப்புக்குள்ளாக்கியதோடு இப்போது சட்டப்படியான ஜாமீனை மறுப்பது என்ன நியாயம்?... கைது செய்யப்பட்டது முதல் இன்றுவரை அவர் சரியாக உணவை எடுத்துக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் உட்கொள்ளவில்லை. இது அவரது உடல்நலத்தையும் மனநலத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இதுதொடர்ந்தால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகிவிடும் என அஞ்சுகிறோம். ஜூலை 3 க்குப் பிறகே வழக்கமான நீதிமன்றங்கள் செயல்படத்துவங்கும் என்பதால் அதுவரை காத்திருக்கநேர்ந்திருக்கிறது.
கைதானவர் நீதிபதி என்ற மாண்பு தெரிந்து, கொல்கத்தா அதிகாரிகள் அவரை மரியாதையுடன் நடத்தினர். ஆனால் தமிழக போலீஸார் அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு இணையாக நடத்தினர். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் சகோதரருக்கு எதிரான இந்த அத்துமீறல்களைக் கொல்கத்தா கவர்னர், மற்றும் இந்திய ஜனாதிபதிக்குத் தெரிவித்து மனு அனுப்பியிருக்கிறோம்” என்றார் வழக்கறிஞர் அறிவுடைநம்பி.

No comments:
Post a Comment