போக்குவரத்து நெரிசல்: பஸ் டிரைவருக்கு தண்டனை
பதிவு செய்த நாள்27ஜூன்
2017
01:27
புனே: போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில், சாலையில் பஸ்சை நிறுத்திய டிரைவருக்கு, புனே கோர்ட் தண்டனை வழங்கியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில், உணவு நேரம் மற்றும் வார விடுமுறை நாளில் பணிக்கு வரும் டிரைவர்கள், ஆங்காங்கே பஸ்களை நிறுத்திவிட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சமீபத்தில், புனேவில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வகையில், பஸ்சை நிறுத்திவிட்டு சென்ற, ஆசிப் ஜிலானி ஷேக் என்ற டிரைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த, புனே கோர்ட், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில், பஸ்சை நிறுத்துவது குற்றம் என்பதால், டிரைவர் ஆசிப் ஜிலானி, கோர்ட் நடவடிக்கைகள் முடியும் வரை, சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், 800 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.கோர்ட் உத்தரவையடுத்து, பஸ்களை பொது இடங்களில் நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடாது என, புனே மாநகர போக்குவரத்து கழகம், டிரைவர்களை எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment