Wednesday, June 28, 2017

செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்

பதிவு செய்த நாள்28ஜூன்
2017
02:11



தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை துவங்குவதற்கு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அளித்திருந்த காலக்கெடுவை, மத்திய அரசு, மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

தமிழகத்தில், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை, அரசு கேபிள் நிறுவனம் மேற்கொள்வதற்கு, மத்திய தொலை தொடர்பு நிறுவனமான, 'டிராய்' மே மாதம் உரிமம் வழங்கியது. அப்போது, ஜூலை, 17க்குள், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு தந்து, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்தாகும் என, எச்சரித்தது.

அதற்கான கெடு நெருங்கிய நிலையில், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்வதற்கான, டெண்டரை தமிழக அரசு, இன்னும் இறுதி செய்யவில்லை. அதனால், காலக்கெடுவை மேலும் மூன்று மாதம் நீட்டிக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதை பரிசீலித்த, மத்திய அரசு, ஒரு மாதம் மட்டும் கெடுவை நீட்டித்துள்ளது. குறித்த கெடுவிற்குள், அதை செயல்படுத்தாவிட்டால், உரிமம் ரத்தாகும் என, எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025