Tuesday, June 20, 2017

10 பேரை ஏமாற்றி திருமணம் செய்த ‘கல்யாண ராணி’ 11வது திருமணத்தின்போது மணக்கோலத்தில் பெண் கைது
2017-06-20@ 03:50:19

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி பெண்ணை மணமேடையில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த பந்தளத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர்முனையில் ஷாலினி பேசினார். அப்போது, தான் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் விரைவில் கேரள உயர் நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு இது 2வது திருமணம் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபருக்கு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலை பந்தளம் அருகே ஒரு கோயிலில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலுக்கு வந்தார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வாலிபர் ஒருவர் ஷாலினியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மணக்கோலத்தில் வருவது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவரின் மனைவிபோல் இருப்பதை கண்ட அவர் நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார். அந்த நண்பர் திருமணம் நடக்க இருந்த கோயிலுக்கு விரைந்து வந்தார். அவரை பார்த்த உடன் ஷாலினி அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து அவர், மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஷாலினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை தெரிவித்தார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பந்தளம் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கோயிலுக்கு விரைந்து மணமகன், மணமகள், அவர்களை சார்ந்த உறவினர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையில் ஷாலினி, திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணம், நகைக்கு ஆசைப்பட்டு இதுவரை 10 பேரை ஏமாற்றி ஷாலினி திருமணம் செய்துள்ளார். ஆரன்முளா, செங்கனூர் காவல் நிலையங்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணத்தாசையால் விபரீதம்

ஷாலினி இதுவரை 10 திருமணம் செய்துள்ளார். ஆனால் ஒரு குழந்தை மட்டும் உள்ளது. சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்துள்ளது. ஆகவே பணம் சம்பாதிக்க இந்த விபரீத வழியை கையாண்டுள்ளார். ‘மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கொடுத்து பலரை தனது வலையில் விழ வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகையுடன் மாயமாகி விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...