திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு - பக்தர்கள் மகிழ்ச்சி...
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஒரே மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான ஆயத்தபணிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஏறக்குறைய 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, அது செய்ய பயன்படும் இடுபொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்டு விற்பனை விலை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது, திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கும் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதி லட்டுவுக்கு வழங்கப்படும் இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கை அடுத்து, திருப்தி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment