ஸ்விஸ் வங்கிகளில் இந்திய டெபாசிட்கள் குறைவு’
சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் மிகவும் குறைவு என்று ஸ்விஸ் தனியார் வங்கியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.8,392 கோடியாகும். அதே சமயத்தில் மற்ற நாடுகளில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
ஸ்விட்சர்லாந்தில் வங்கி கணக்கைத் தொடங்குவதை விட சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பகுதிகளில் வங்கி கணக்கு தொடங்குவது மிகவும் எளிது என ஜெனிவாவில் உள்ள வங்கியாளர் ஜான் லாங்க்லோ தெரிவித்தார். அதனால் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் மிகவும் குறைவாக இருக்கும்.
கடந்த 2006-ம் ஆண்டு காலத்தில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.23,000 கோடியாக இருந்தது. அதன்பிறகு இந்தியர்களின் டெபாசிட் குறையத் தொடங்கியது.
No comments:
Post a Comment