லாரி குடிநீர் கேட்டு காத்திருப்பு: கட்டண முறையில் 10 நாட்களாகியும் விநியோகிக்காததால் மக்கள் அவதி
கட்டண முறையில் லாரி குடிநீர் வழங்கக் கோரி, சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்து, 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படாததால், பொது மக்கள் கடுமையாக அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டு விட்டன. இதனால் சென்னை குடிநீர் வாரியம் தினந்தோறும் விநியோ கிக்கும் குடிநீரின் அளவை 850 மில்லியன் லிட்டரில் இருந்து, 550 மில்லியன் லிட்டராக குறைத்து விட்டது. தற்போது குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் அளவு குறைக்கப்பட்டு லாரிகள் மூலமே அதிக அளவில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கட்டண முறையிலும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்படுகிறது. லாரி களில் குடிநீர் பெற விரும்புவோர், அந்தந்த பகுதி குடிநீர் நிரப்பும் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய் வோருக்கு 6 ஆயிரம் லிட்டர் ரூ.400-க் கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.650-க் கும் விநியோகிக்கப்படுகிறது. அந்தந்த பகுதி நீர் நிரப்பு நிலை யங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், தலைமை யகத்தில் பதிவு செய்யும் முறை யையும் குடிநீர் வாரியம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், லாரி குடிநீர் கோரி பதிவு செய்வோர், 10 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட, வில்லி வாக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 9-ம் தேதி குடிநீர் கேட்டு பதிவு செய்தோம். 18-ம் தேதி ஆகியும் இன்னும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. குடிநீர் வாரிய அலுவலகத்தில் கேட்டால், போதிய லாரிகள் இல்லை என்றும், பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அத னால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதனால் அத்தியா வசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம்” என்றனர்.
வழக்கால் தாமதம்
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை குடிநீர் வாரியத்திடம் 520 ஒப்பந்த குடிநீர் லாரிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக லாரி நடைகள் அதிகரிக்கப்பட்டு, தினமும் 7 ஆயிரத்து 200 நடைகள் இயக்கப்படுகின்றன. கட்டண குடிநீர் கேட்டு பொதுமக்கள் பதிவு செய்வது அதிகரித்துள்ள நிலை யில், கூடுதலாக ஒப்பந்த லாரி களை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தோம். லாரிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் கூடுதல் லாரிகள் பணிகளைத் தொடங்க இயலாத நிலை இருந்தது.
தற்போது வழக்கு முடிந்துவிட்ட நிலையில், சில தினங்களில் புதிய ஒப்பந்த லாரிகள் பணிக்கு வர உள்ளன. அதன் பின்னர், குடிநீர் கேட்டு பதிவு செய்த 48 மணி நேரத்தில் குடிநீர் விநியோகிக் கப்படும். கூடுதல் லாரிகளுக்காக முதலில் வருவோருக்கு முன்னு ரிமை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒரே நபர், சில தினங்களில் மீண்டும் பதிவு செய்யும்போது, அவருக்கு முன்பு பதிவு செய் வோருக்கு வழங்கிய பின்னரே அவருக்கு விநியோகிக்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், ஒரே கட்டிடத்துக்கு குடிநீர் கேட்டு பல பதிவுகளைச் செய்கின்றனர். அதில் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுத்தான் குடிநீர் வழங்க முடியும். மற்றவர்களும் தங்கள் பதிவுக்கும் குடிநீர் கேட்கின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment