Monday, June 19, 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே கரூரில் மருத்துவக்கல்லூரி
2017-06-19@ 01:41:45



கரூர், ஜூன் 19: கோர்ட் தீர்ப்புக்கு பிறகே கரூர் மருத்துவக் கல்லூரி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் தலைமை மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கரூர் மருத்துவக் கல்லூரி குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதன் தீர்ப்புக்கு பிறகே அதை எங்கு அமைப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான கட்டிட வசதிகள் உட்பட சில அடிப்படை தேவைகள் குறித்து அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முதற்கட்டமாக 100 பேட்டரி மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பேட்டரி மினி பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 4.1.2025 AND 5.01.2025