Monday, June 19, 2017

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் அரசு குடியிருப்பில் வசிக்க முடியாது: நீதிமன்றம் திட்டவட்டம்
2017-06-19@ 00:43:56



புதுடெல்லி: பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தகுதியை இழந்துவிடும் நபர், ஊழியர் குடியிருப்பில் (குவார்ட்டர்ஸ்) வசிப்பதை தொடர முடியாது, காலி செய்வதுதான் தீர்வு என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மனித நடவடிக்கை மற்றும் தொடர்பான அறிவியல் நிறுவனத்தில் (இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹியுமன் பிஹேவியர் அண்ட் அலைடு சயின்சஸ் - ஐஎச்பிஏஎஸ்) 1980ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து 26 ஆண்டுகள் சேவை புரிந்த ஊழியர், துரதிஷ்டவசமாக 2006ம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பணியிலிருந்த போது நிறுவனத்தின் ஊழியர் குடியிருப்பில் 1982ம் ஆண்டு தொடங்கி வசித்து வருகிறார்.

நீக்கம் செய்யப்பட்ட பின், வீட்டில் வசிப்பது சட்டப்படி செல்லாது. அங்கீகாரமின்றி வீட்டில் வசிக்க அனுமதி இல்லை. உடனே வார்ட்டர்சில்(நிறுவன குடியிருப்பு) இருந்து வெளியேற வேண்டும், என நிறுவனத்தின் சட்ட அதிகாரி நோட்டீஸ் விடுத்தார். நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர், நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவில் இருந்து காப்பாற்றும்படி, நீதிமன்றத்தை அணுகினார். மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.ஜெயச்சந்திரா தீர்ப்பு வழங்கி நேற்று கூறியதாவது: பணி நீக்க உத்தரவை எதிர்த்து போராட ஐஎச்பிஏஎஸ் சட்ட அதிகாரி உங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார்.

அது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை நீங்கள் முறையிட்ட அனைத்து முயற்சிகளிலும் பணிநீக்கம் உறுதியானது. பணிநீக்கம் உறுதி ஆனதால், ஊழியர் எனும் அந்தஸ்தை இழந்து விடுகிறீர்கள். ஊழியர்களுக்கான குடியிருப்பில் மேலும் தொடர்ந்து வசிக்க உங்களுக்கு அங்கீகாரம் இல்லை. எனவே சட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதி செய்கிறது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 4.1.2025 AND 5.01.2025