Monday, June 19, 2017

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் குப்பை தேக்கம்| துர்நாற்றம், கொசுத் தொல்லையால் பொதுமக்கள் அவதி

டி.செல்வகுமார்

விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் குப்பைகள் சர்வ சாதாரணமாகக் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்திருப்பதால் கொசு உற்பத்தி பண்ணையாக இக்கால்வாய் மாறிக் கிடக்கிறது.
விருகம்பாக்கம் அருகே சின்மயா நகரில் இருந்து விருகம் பாக்கம் அரும்பாக்கம் கால்வாய் தொடங்குகிறது. அங்கிருந்து எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், பெரியார் பாதை, அண்ணா நெடும் பாதை, சூளைமேடு, மேத்தா நகர் வழியாக 6.4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த கால்வாய் மேத்தா நகரில், நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது.
விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாயை தமிழக பொதுப்பணித் துறை பராமரித்து வந்தாலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சியே அவ்வப் போது பராமரித்து வருகிறது. “மழைக்காலம் நெருங்கும்போது மட்டும்தான் இந்த கால்வாயில் குப்பை கூளங்கள், கட்டிட இடிபாடு கள் அவசர கதியில் அகற்றப்படும். மற்ற காலங்களில் எப்போதாவது தான் குப்பைகள் அகற்றப்படும். அதுவும் அரைகுறையாகத்தான் அகற்றுவார்கள்” என்று புகார் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

சூளைமேடு ஜேப்பியார் பாலி டெக்னிக் அருகே விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாயில் குப்பை களும், கட்டிட இடிபாடுகளும் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவு நீர் தேங்கி, கொசுக் கள் உற்பத்தியாகும் பண்ணையாக இக்கால்வாய் மாறியிருக்கிறது. கோடை வெப்பமும் குறையாத நிலையில் அவ்வப்போது மின்விநி யோகமும் தடைபடுகிறது. இது போன்ற நேரத்தில் கொசுத் தொல் லையால் தூக்கத்தைத் தொலைக் கின்றனர் சூளைமேடு, மேத்தா நகர் மக்கள்.
மேத்தா நகர், சூளைமேடு, அண்ணா நெடும்பாதை, பெரியார் பாதை, ரயில்வே காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. சிறியதும், பெரியதுமாக உணவகங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த விடுதிகள், உணவகங்களின் கழிவுகள், வீடுகளில் சேரும் குப்பை கள், கட்டிட இடிபாடுகள் விருகம் பாக்கம் அரும்பாக்கம் கால்வாயில் சர்வசாதாரணமாகக் கொட்டப்படு வதால், துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் இப்பகுதியின் நிரந் தரப் பிரச்சினைகளாக உள்ளன.
இதுபற்றி புகார் கொடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால், பல்வேறு வகையான காரணங்களைக் கூறி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை முற்றி லுமாகத் தடுத்தால்தான் இப்பகுதியில் துர்நாற்றம், கொசுத் தொல்லை பிரச்சினை முடிவுக்கு வரும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 4.1.2025 AND 5.01.2025