Monday, June 19, 2017

தந்தையர் தினத்திற்கு இந்த கேட்ஜெட்களை பரிசளிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்? 

#FathersDay

ஞா.சுதாகர்




பாராட்டுக்கு மட்டுமல்ல... பாசத்திற்கும் அடையாளமாக விளங்குவது பரிசு. அன்பின் அடையாளமாக, வாழ்த்தின் வடிவமாக ஒருவருக்கு அளிக்கப்படும் பரிசானது வெறும் பொருளாக மட்டும் அவரிடம் நிலைகொண்டிருப்பதில்லை; நினைவுகளாகவும் நிலைகொண்டிருக்கும். அப்படி இனிய நினைவுகளை உங்கள் தந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே, இன்று இந்தியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இளைஞர்கள் தற்போது எப்படி மாறியிருக்கார்களோ, அதைப்போலவே தந்தைகளும் காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். காலையில் மகனையோ, மகளையோ பள்ளிக்கு அனுப்பவதே தந்தைகளுக்கு டென்ஷனாக இருந்த காலம் போய், இன்று நகரின் நம்பர் 1 பள்ளியில் சீட் வாங்கவே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய அப்பாக்கள். 'கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்' என எழுதி பசையொட்டி அனுப்பின இன்லான்ட் லெட்டர் காலத்து அப்பாக்களும், தற்போது "பசங்க போன் பண்ணாலே அட்டெண்ட் பண்ண மாட்டின்றாங்க!" எனப் புலம்பும் பவர் பாண்டிகளாக மாறிவிட்டார்கள். இப்படிப்பட்ட அப்டேட்டட் அப்பாக்களுக்கு பரிசளிக்க, இந்த கேட்ஜெட்களை நீங்கள் பரிசீலிக்கலாம்!


1. ஃபிட்பேண்ட்:



ஃபிட்னஸ் மீது அக்கறை கொண்டவர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த ஃபிட்பேண்டுகள்தான். காலையில் வாக்கிங், ஜாக்கிங், யோகா முதல் இரவில் ஸ்லீப் ட்ராக்கிங், ஹார்ட்ரேட் மானிட்டர் வரை, ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ள கேட்ஜெட் இது. இதில் அதிக விலைகொண்ட ஃபிட்பேண்டுகள் இருந்தாலும், குறைந்தது 2,000 ரூபாயிலேயே நல்லதொரு ஃபிட்னஸ் பேண்டை வாங்கிவிடலாம்.

2. இயர்போன்:

வானொலி முன்னால் அமர்ந்து வால்யூமைக் கூட்டிக்குறைத்து பாட்டு கேட்டதெல்லாம் தற்போது பழங்கதையாகிவிட்டது. ஐபாட், எம்.பி 3 ப்ளேயர்கள், மொபைல்கள், ஆன்லைன் இசை தளங்கள் என 'மியூசிக்' மொத்தமும் நம் கைக்குள் அடங்கிவிட்டது இசை. இப்படி அனைத்து வகையிலும் இசை கேட்க உதவும் முக்கியமான சாதனம் இயர்போன். காலையில் நாள் துவங்குவதில் இருந்து இரவில் நாள் முடியும் வரை பெரும்பாலனோருடன் பயணிப்பது இயர்போன்தான். எனவே இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப க்யூட்டான இயர்போன்களை வாங்கி பரிசளிக்கலாம். ஒவ்வொரு முறையும் அது உங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். இயர்போன் வேண்டாம் என்றால் அடுத்தது, ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் நல்ல சாய்ஸ்.



3. கிண்டில்:

உங்கள் அப்பா மொபைல் அல்லது டேப்லட் போன்றவற்றில் இ-புக் படிப்பவராக இருந்தால், யோசிக்கவே வேண்டாம். அவருக்கு கிண்டில் சரியான கிஃப்ட். ஏராளமான நூல்களை சேமித்து வைத்துக்கொள்ளவும், எளிதில் எங்கே வேண்டுமென்றாலும் எடுத்து சென்று படிக்கவும் கிண்டில்கள் மிக உதவும். கிண்டில்களில் பலவகை உண்டு. அதில் உங்கள் விருப்பம், பட்ஜெட், தரம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு வேண்டியதை முடிவு செய்யலாம்.




4. மொபைல்:

நல்ல ரேம், சூப்பர் கேமரா, மீடியம் டிஸ்ப்ளே என 10,000 ரூபாய்க்குள்ளாகவே நல்ல நல்ல மொபைல்கள் வரத்துவங்கிவிட்டன. இதுநாள் வரை நீங்கள் பயன்படுத்திய மொபைல்களை மட்டுமே அப்பாவுக்குத் தருபவராக இருந்தால் ஒரு சேஞ்சுக்கு, இப்படி புது மொபைல்களை பரிசளிக்கலாமே!

5. ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்கள்:

சாதாரண டிவிக்கு கேபிள் கனெக்ஷன், எல்.இ.டி டிவிக்கு டி.டி.ஹெச் கனெக்ஷன் எனப் பிரித்து தருவது போல, தற்போது மொபைலுக்கும் வந்துவிட்டது ஸ்ட்ரீமிங் சேவைகள். அமேசான் ப்ரைம், ஜியோ டிவி, நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் என பல மொபைல் ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்கின்றன. இவற்றில் ஹாட்ஸ்டார், ஜியோ டிவி போன்றவை இப்போதைக்கு இலவசம்தான். ப்ரீமியம் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். இவற்றை உங்கள் அப்பாவுக்கு இன்ஸ்டால் செய்து தரலாம். இன்னும் அதிகமான நிகழ்ச்சிகள், படங்கள் போன்றவற்றை விரும்பினால் அவற்றிற்கு ஒரு வருட சந்தா செலுத்தலாம். இவற்றின் விலை மிகவும் குறைவே! ;-)

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...