144 தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை
By DIN | Published on : 07th March 2018 01:39 AM |
தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 22 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு சேர்க்கை ஆணையை வழங்கிய மருத்துவக் கல்வி இயக்க
தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 2016-2017-ஆம் கல்வியாண்டில் அந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 144 மாணவர்களுக்கும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற 144 மாணவர்களில் 87 பேர் சுயநிதிக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று படித்து வந்தனர். மீதம் உள்ள மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற்றவர்கள். மாலை 3 மணியளவில் நிறைவுபெற்ற கலந்தாய்வில் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதுதொடர்பாக தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறுகையில், எந்தெந்த கல்லூரிகளில் எல்லாம் இடங்களை அதிரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளதோ, அந்தெந்தக் கல்லூரிகளில் இந்த 144 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே 250 இடங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அண்மையில்தான் தொடங்கப்பட்டது. எனவே, இந்த மூன்று கல்லூரிகள் தவிர்த்து, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது என்றார்.

No comments:
Post a Comment