Sunday, March 18, 2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இன்ஜினியரிங் படிக்க தகுதியில்லாதவர்கள்: உயர்கல்வித்துறை செயலாளர் பேச்சு

     2018-03-18@ 01:46:41
dinakaran
சென்னை: சென்னை ஐஐடியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் பேசியதாவது: அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உயர்கல்விக்கு செல்வோரின் சராசரி 23 சதவீதம், ஆனால் தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 46 சதவீதமாக உள்ளது. செமஸ்டர் தேர்வு காலம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்குள் செமஸ்டர் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்ததன் காரணமாக 25,000 விண்ணப்பங்கள் குறைவாக வந்தது. தனியார் கல்லூரி முதல்வர்கள் ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறையில் கலந்தாய்வு நடத்துமாறு கேட்டுள்ளனர். இந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்வு முழுக்க முழுக்க இணையதளம் மூலமாகவே நடைபெறும். எல்லோரும் இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இன்ஜினியரிங் படிக்க தகுதி இல்லாதவர்கள். இவ்வாறு உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறினார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...