Sunday, March 25, 2018

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி நாள்

Added : மார் 25, 2018 06:00

சென்னை: 'வருமான வரி கணக்குகளை, தாக்கல் செய்யாதவர்கள், வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.நடப்பு, 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு செலுத்தாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை சார்பில், கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதை பெற்றவர்கள், வருமான வரித்துறையிடம், மேல் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகள் கோரியும், பதில் அளித்துள்ளனர்.அவர்கள் தங்கள் கணக்குகளை, வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 28338014, 28338314 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024