Saturday, March 24, 2018

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவு'

Added : மார் 24, 2018 00:41

தமிழக அரசு ஊழியர்களுக்கு, அடுத்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கிடைக்கிறது. இது மட்டுமின்றி, பண்டிகை நாட்களிலும், விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வரவுள்ளது. வியாழக்கிழமை, மார்ச், 29 மஹாவீர் ஜெயந்தி; 30ல் புனித வெள்ளி. இந்த நாட்களை அடுத்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த நான்கு நாட்களில், 31ல் மட்டுமே வங்கிகள் இயங்கும். மற்ற நாட்களில் இயங்காது.

- நமது நிருபர் --

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...