Saturday, March 24, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நாளை துவக்கம்

Added : மார் 24, 2018 00:30

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங், 'ஆன்லைன்' வாயிலாக, நாளை துவங்குகிறது.
நாட்டில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு செல்கிறது.இதற்கான கவுன்சிலிங்கையும், நிகர்நிலை பல்கலை மற்றும் மத்திய பல்கலையில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங்கையும், மத்திய சுகாதாரத் துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 17ல் துவங்கி, இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங், நாளை துவங்கி, நாளை மறுநாள் வரை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாக நடைபெற உள்ளது. இடம் பெற்றவர்கள் குறித்த விபரங்கள், மார்ச், 27ல், இணையதளத்தில் வெளியிடப்படும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு, ஏப்., 6 முதல், 8 வரை நடைபெறும். கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெறகிறது. இடம் பெற்றவர்கள் குறித்து, ஏப்., 11ல் வெளியிடப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநில அரசுகளிடம், ஏப்., 22ல் ஒப்படைக்கப்படும். நிகர்நிலை பல்கலைக்கான இறுதி கட்ட கவுன்சிலிங், மே, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதில், மீதமுள்ள இடங்கள், அந்தந்த மருத்துவ பல்கலை நிர்வாகத்திடம், மே, 26ல் ஒப்படைக்கப்படும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...