மதுரைக்கு எட்டாக்கனியானது எய்ம்ஸ்
கோட்டை விட்ட மும்மூர்த்திகள்
மதுரை : 'மதுரை தோப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எரிவாயு குழாய் கடக்கிறது என்பதால், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடியாது என மத்திய குழு தெரிவித்தது.
இதனால் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளோம்' என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தடையில்லா சான்று கொடுத்தும் முதல்வர் இப்படி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்மாவட்டங்களில் கட்சி முதல் மருத்துவம் வரை அனைவரும் நம்புவது மதுரையைதான். இதனால் தான் உயர் நீதிமன்ற மதுரை கிளை இங்கு அமைக்கப்பட்டது. 'மருத்துவத்தின் மைல் கல்லாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும்' என தென் மாவட்டத்தி னர் நம்பினர். கன்னியாகுமரி, - சென்னை உட்பட 3 தேசிய நெடுஞ்சாலைகளும் தோப்பூர் வழியாக செல்கிறது. 8 கி.மீ., துாரத்தில் விமான நிலையம் உள்ளது.
மதுரை 'ஊறுகாய்'
மத்தியில் காங்., தலைமையில் அரசு இருக்கும்போது இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதை நம்பி தோப்பூரில் துணை நகரமும் அமைக்கப்படுகிறது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதுரை, சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் உருப்படியாக எந்த பெரிய திட்டமும் இல்லை. இவர்கள் தான் இப்படி என்றால், தேசிய கட்சிகளோ அதை விட மோசம். அரசியல்வாதிகளுக்கு மதுரை என்றாலே கொண்டாட்டம் தான். கட்சி மாநாடு, பெரிய பொதுக்கூட்டம் என்றவுடன், மதுரை தான் இவர்களுக்கு நினைவுக்கு வரும்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆட்களை திரட்டி மதுரையை 'இரண்டாக்கி' விடுவர். அதற்கு பின் அடுத்த மாநாட்டின் போதுதான் மதுரை நினைவுக்கு வரும்.சாப்பாட்டுக்கு ஊறுகாய் எவ்வளவு தேவையோ, அதேபோல் தான் அரசியல்வாதிகளுக்கு மதுரை, சுற்றியுள்ள மாவட்ட மக்களும். 'அடுக்கு மொழி, அலங்கார வார்த்தைகளை பேசினால் கைதட்டி, விசில் அடித்து, குத்தாட்டம் ஆடி கலைந்து செல்வதில் மதுரைக்காரர்களுக்கு ஈடு இணை இல்லை' என்ற நினைப்பில் தான் அரசியல்வாதிகள் உள்ளனர். மொத்தத்தில், அரசியல்வாதிகளுக்கு மதுரை மக்கள் எப்போதுமே 'ஊறுகாய்'தான். தென் மாவட்ட மக்களுக்கு என்ன தேவை என்பதை இவர்களாகவும் சிந்திக்க மாட்டார்கள்.
இப்போதைய மத்திய அரசை போல யாராவது ஒருவர் 'ரூம் போட்டு' யோசித்து, ஒரு திட்டத்தை சொன்னாலும், அதை 'சீட்டு'க்கு அடியில் போட்டு விட்டு 'தேமே' என இருப்பார்கள். இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் லட்சணம்.'மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். அமையா விட்டால் ராஜினாமா செய்ய தயார்' என மதுரை அமைச்சர் உதயகுமாரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போசும் அறிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஒட்டு மொத்தமாக போராடி வரும் நிலையில், அதேபோல் ஒருங்கிணைத்து, 'மதுரையில் எய்ம்ஸ் அமைத்தே தீர வேண்டும்' என தென்மாவட்ட எம்.பி.,க்களை ஒருங்கிணைத்து போராட மதுரை எம்.பி., கோபாலகிருஷ்ணன் தவறி விட்டார்.வைகை அணையில் நீர் ஆவியாதலை தடுக்க தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விட்ட அமைச்சர் செல்லுார் ராஜு கூட 'மதுரை அமைச்சர்' என்ற முறையில் முதல்வர் பழனிசாமிக்கு அழுத்தம்கொடுக்கவில்லை.
தேர்தலின் போது மட்டும் ஓட்டுக்காக 'அதை செய்வேன்; இதை செய்வேன்' என்று வாய் சவடால் பேசும் அரசியல்வாதிகள், அதை செயலில் காட்டுவதில்லை. அனைத்தும் மதுரைக்கு சாதகமாக இருக்கும்போது, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுவதற்கு முன், மன்னார்குடி கும்பலை திருப்திப்படுத்த தஞ்சாவூர் செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்தது.
இன்று அரசியல் காட்சி மாறி விட்ட நிலையில், மதுரையில் தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். செங்கிப்பட்டியில் அமைவதால் சில மாவட்டங்கள் மட்டுமே பயன் பெறும். மதுரையில் அமைந்தால் 13 மாவட்ட மக்கள் பயன் பெறுவர்.
ஐ.ஓ.சி., தடையில்லை
மதுரை அரசு மருத்துவ கல்லுாரி டீன் (ஓய்வு) எஸ்.ரேவதி:
எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு முன் அங்கு பணிபுரியும் டாக்டர், ஊழியர்களின் குழந்தைகளுக்கு உரிய கல்வி வசதி செய்துதர வேண்டும் என்பது மருத்துவ கவுன்சில் விதி முறைகளில் ஒன்று. அதன்படி நர்சரி முதல் மருத்து வம், பொறியியல் கல்வி வரை அனைத்துமே மதுரையில் தான் கிடைக்கும். ஐ.ஓ.சி., பைப் லைன் செல்வதற்கும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. டாக்டர், ஊழியர் குடியிருப்பு கள் மற்றும் மருத்துவ மனை கட்டடங்கள் ஐ.ஓ.சி., பைப் லைனுக்கு சம்பந்தம் இல்லாமல், தனித்தனியே தான் கட்டுவது என திட்டமே உள்ளது.
இதற்காக தான் ஐ.ஓ.சி., நிறுவனமே, 'எய்ம்ஸ் அமைய எந்த தடையும் இல்லை' என அரசுக்கு சான்று வழங்கியது. இதற்கு தேவைப்படும் 300 ஏக்கரில் 200 ஏக்கர் நிலம் சுகாதாரத்துறைக்கு சொந்தமானது. இதனால் நிலம் கையகம் செய்ய எந்த சிக்கலும் இல்லை.சாலை, விமானம், ரயில் போக்குவரத்து முழுவதும் கிடைக்கும் ஒரே இடம் மதுரை தான். இங்கு எய்ம்ஸ் அமைந்தால் கன்னியாகுமரி முதல் திருச்சி வரையுள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த 15 லட்சம் மக்கள் உயர்
மருத்துவ சேவைகளை பெறுவர். கட்டாயம் மதுரைக்கு தான்எய்ம்ஸ் வரவேண்டும்.
தென்மாவட்ட மக்களுக்கு துரோகம்
எஸ்.பி. ஜெயப்பிரகாசம், ஒருங்கிணைப்பாளர்,
மதுரை எய்ம்ஸ் கூட்டு நடவடிக்கை குழு:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி செங்கிபட்டியில் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மாநில அரசு தென்மாட்ட மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்கிறது. மதுரையில் அமைந் தால் கேரளா உட்பட வெளிமாநிலத்தவரும் பயன்பெறுவர். தோப்பூர் அருகே சென்னை, பெங்களூரு நெடுஞ்சாலை,ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் இருப்பதால் டாக்டர்கள், மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.ஆனால், செங்கிபட்டியில் இது போன்ற எந்த ஒரு வசதியும் இல்லை. இந்த அறிவிப்பு யாரையோ திருப்திபடுத்த நினைப்பது போல உள்ளது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடனே இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
மதுரை வெறும் ஓட்டு வங்கி
வி.எஸ்.மணிமாறன், மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்: முதல்வர் பழனிசாமி சட்டசபையில் செங்கிபட்டியில் தான் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று தான் பேசியுள்ளார். ஆனால் அரசு செய்திக்குறிப்பில் 'தேர்வு செய்யப்பட்ட 5 இடங்களில் எங்கு எய்ம்ஸ் அமைந்தாலும் நல்லது' என்று, கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோப்பூரில் ஐ.ஓ.சி., குழாய் செல்வதால் அங்கு எய்ம்ஸ் அமைக்க முடியாது என்று முதல்வர் கூறி இருக்கிறார்.
இங்கு எய்ம்ஸ் அமைக்க ஒதுக்கப்பட்ட 198 ஏக்கர் நிலத்தில் வெறும் ஆறரை ஏக்கரில் தான் குழாய் செல்கிறது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை. 'தாராளமாக எய்ம்ஸ் அமைக்கலாம்' என ஐ.ஓ.சி., தடையில்லா சான்றிதழ் வழங்கிவிட்டது.
கட்டுமானம் கட்டும் போது மட்டும் எங்கள் பொறியாளரை உடன் வைத்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறி உள்ளது. தடையில்லா சான்று கிடைத்த பின்பும் குழாயை காரணம் காட்டி, மதுரைக்கு கிடைக்கப் போகும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழக அரசு தட்டிப் பறிக்கப் ர்க்கிறது.அரசியல்வாதிகள் தென்மாவட்ட மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர முயற்சி செய்வதே இல்லை. சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னை உட்பட 5 இடங்களில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதில், தென்மாட்ட நகரங்களில் ஒன்று கூட இல்லை என்பது வேதனையான விஷயம்.
மதுரையில் கருவுற்ற தாய்மார்கள், குழந்தை களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது என்று புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இங்கு எய்ம்ஸ் அமைந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்படும். தொடர்ந்து தென்மாவட்ட மக்களை அரசு புறக்கணிப்பது நியாயமில்லை. விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

No comments:
Post a Comment