Thursday, March 1, 2018

ஜெயேந்திரர் உடலுக்கு காலை 7 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்தலாம்: சங்கர மடம் அறிவிப்பு


2018-03-01@ 01:03:38



சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பூதவுடலுக்கு இன்று காலை 7 மணிவரை அஞ்சலி செலுத்தலாம் என காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கர மட நிர்வாகி சுந்தரேச அய்யர் தெரிவித்ததாவது: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் காலை 7 மணி வரை சங்கர மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் சன்னியாசிகள் நல்லடக்கம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளின்படி பூஜைகள் 11 மணிவரை நடைபெறும்.

அதன்பிறகு 11.30 மணியளவில் மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர் சமாதிக்கு இடது புறம் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றார். மேலும் இந்தச் சடங்குகள் அனைத்தும் முடிந்தபிறகு அடுத்த மடாதிபதி தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்களை தேடி வந்த சங்கராச்சாரியார்:
குடியரசு தலைவர் முதல் பணக்காரர்கள்.,விஐபிகள்தான் சங்கர மடத்தை தேடி வருவது வாடிக்கை. சங்கராச்சாரியார்கள் முக்கிய கோயில்கள், நிகழ்வுகளுக்காக வெளியில் செல்வதும் நடக்கும். சந்திரசேகரர் வரை அதுமட்டுமே வழக்கம். ஆனால் சங்கராச்சாரியர் ஒருவர் மக்களை தேடி வந்தார் என்றால் அது ஜெயந்திரர் மட்டும்தான். சந்திரசேகரர் மூப்பு காரணாக மட பொறுப்புகளை ஜெயந்திரர் கவனிக்க ஆரம்பித்ததும் அந்த மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

அதுமட்டுமல்லாமல், சாதியை கருத்தில் கொள்ளாமல் எளிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் குடமுழுக்கு, விழாக்களிலும் ஜெயந்திரர் பங்கேற்றார். அதற்கான நிதி உதவிகளையும் சங்கரம் மடம் செய்திருக்கிறது.அதுமட்டுமின்றி ‘ஜன கல்யாண் ஜன ஜாக்ரன்’ அமைப்பை தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்த அமைப்பின் மூலம் வாங்கிய ஆட்டோக்கள் தான் காஞ்சிபுரத்தில் அதிக அளவில் ஓடிக் கொண்டிருந்தன.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...