Sunday, March 11, 2018

விஷம் வைத்து 7 மயில்கள் கொலை

Added : மார் 11, 2018 03:43

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, விஷம் கலந்த அரிசியால், ஏழு மயில்கள், ஆறு ஆடுகள்,நான்கு நாய்கள் இறந்தன.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, பிள்ளையாம்பேட்டை பகுதியில், விவசாய பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன. அவற்றை விரட்டுவதற்காக, விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உமாமகேஸ்வரபுரம்பகுதியில், நேற்று ஏழு மயில்கள் இறந்து கிடந்தன. அதே பகுதியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான, ஆறு ஆடுகள், நான்கு நாய்கள், அணில் உள்ளிட்டவையும் இறந்து கிடந்தன. வனத்துறையினர், இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பின் புதைத்தனர். விஷ மருந்தோடு அரிசியை கலந்து வைத்ததில், மயில்களும், விலங்குகளும் இறந்திருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணமானோரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024