Sunday, March 11, 2018

காஞ்சி குமரகோட்டம் கோவிலில் 100 ஆண்டு வெண்கல சிலை மாயம்

Added : மார் 11, 2018 04:03


காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில் இருந்த, கச்சியப்பர் சிவாச்சாரியார் சிலை மாயமானதாக, கோவில் செயல் அலுவலர், போலீசில் நேற்று புகார் அளித்து உள்ளார்.காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு, 100 ஆண்டுகளுக்கு முன் வெண்கல சிலை செய்து வைக்கப்பட்டிருந்தது.ஆண்டுதோறும் பிப்., 24ல், கச்சியப்பருக்கு உற்சவம் நடைபெறும். வழக்கம்போல், பிப்., 24ல் உற்சவத்தன்று, புறப்பாடுக்கு தயார் செய்ய சென்ற போது, கச்சியப்பர் சிலை காணவில்லை. அதற்கு பதில், அருணகிரிநாதர் சிலையை அலங்கரித்துஉற்சவம் நடத்தினர்.
கோவில் உள்பிரகாரத்தில், வள்ளி - கல்யாணசுந்தரர் மண்டபத்தில், மொத்தம், 19 சிலைகள்உள்ளன. காணாமல் போன கச்சியப்பர் சிவாச்சாரியார் சிலை, 29 செ.மீ., உயரமும், 18 செ.மீ., அகலமும், 7.47 கிலோ எடையும் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்டது.இது குறித்து, கோவில் செயல் அலுவலர், தியாகராஜன் கூறுகையில், ''வேறு எங்காவது இருக்கலாம் என, தேடி பார்த்தோம். சிலையை கண்டுபிடிக்க முடியாததால், நேற்று மாலை, போலீசில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...