Saturday, March 3, 2018

தாய்ப்பால் கொடுக்கும் படம் : 'மாடல்' அழகி மீது வழக்கு

Added : மார் 03, 2018 00:35





கொல்லம்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு பெண், குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்ட, மாதம் இரு முறை வெளியாகும் மலையாள இதழ் மற்றும், 'மாடல்' நடிகை மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்து உள்ளது.
விழிப்புணர்வு : கேரளாவில், மாதம் இரு முறை வெளியாகும், மலையாள இதழான, 'கிருகலட்சுமி'யின், சமீபத்திய பதிப்பில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் வெளியாகின. இதற்காக, இதழின் அட்டையில், ஒரு பெண், குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படம் வெளியிடப்பட்டது. இதை கண்டித்து, சமூக தளங்களில் பலர் கருத்து வெளியிட்டுஇருந்தனர்.இதற்கிடையே, அந்த இதழ் மற்றும் படத்தில் உள்ள மாடல் நடிகைக்கு எதிராக, கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில், வினோத் மேத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதன் விபரம்: திருமணமாகாத மாடல் அழகி, கிலு ஜோசப் என்பவர், அந்த படத்தில் உள்ளார். இந்த படம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, மக்களை கவர வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டு உள்ளது.
நடவடிக்கை : அந்த படம், மிகவும் ஆபாசமாக உள்ளது. உண்மையில், எந்த தாயும், இந்த அளவு மோசமாக, உடல் பாகங்கள் தெரியும்படி, பாலுாட்ட மாட்டார். மக்களை திசை திருப்பும் வகையில் செயல்பட்டுள்ள, அந்த இதழ் மற்றும் நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024