Monday, March 5, 2018

'மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை கொடுமைப்படுத்தும்'
Added : மார் 05, 2018 01:47

புதுடில்லி: 'மனைவி வீணாக சந்தேகப்படுவது, கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும்' என, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு:கணவனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக, மனைவி வீணாக சந்தேகப் படுவதும், கணவனை கொடுமைப்படுத்துவதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.இதுபோல், பொய்யாக குற்றம் சுமத்துவது, கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டும்போது, அந்த பெண்ணுடன் வாழ்வது, ஆபத்தாகவே இருக்கும்.இவ்வாறு புகார் கூறும்போது, கணவன் மற்றும் மற்றொரு பெண்ணின் கண்ணியத்துக்கும், நற்பெயருக்கும், மனைவி களங்கம் ஏற்படுத்துகிறார்; இது,ஆபத்தான போக்கு.அதனால், இந்த வழக்கில், பொய் புகார் கூறி, சித்ரவதை செய்யும் மனைவிக்கு எதிராக, கணவனுக்கு விவாகரத்து அளித்து, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024