Monday, March 5, 2018

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

Added : மார் 05, 2018 00:24

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2வுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 4 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஏப்., 13 வரையிலும் தேர்வுகள் நடக்கின்றன. இத்தேர்வுகளில், நாடு முழுவதும், 11 ஆயிரத்து, 574 பள்ளிகளைச் சேர்ந்த, 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். 10ம் வகுப்புக்கு, 1,564; பிளஸ் 2வுக்கு, 1,252 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பில், 6.71 லட்சம் மாணவியர் உட்பட, 16.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், ஐந்து மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 4.95 லட்சம் மாணவியர் உட்பட, 11.86 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மண்டலத்தில், 71 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 15 ஆயிரத்து, 700 பேர், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.





Advertisement

No comments:

Post a Comment

University of Madras to implement NEP's Academic Bank of Credits

University of Madras to implement NEP's Academic Bank of Credits The Senate has passed a resolution to create ABC IDs for all students e...