Friday, March 9, 2018

கொடிய நோயாளிகளை கருணை கொலை செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்
Added : மார் 09, 2018 11:04



புதுடில்லி: மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு கருணைகொலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரியல் சாசன அமர்வு விசாரித்தது:
தொடர்ந்து பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம். கண்ணியத்துடன் மரணமடைய மனிதர்களுக்கு உரிமை உள்ளது.
நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய அனுமதிக்கலாம் மேலும் கருணை கொலை செய்வதற்கான சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024