Saturday, March 10, 2018

இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

Added : மார் 10, 2018 06:37



சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டார். இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி,
அரசியல் இயக்கம் துவங்க முடிவெடுத்த பின்னர் இமயமலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகள்ஆகிறது. புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்த பட்சம் 10 நாள் முதல் 15 நாள் வரை தங்க திட்டமிட்டு உள்ளேன். தர்மசாலா ,பாபா குகை்கும் சென்று வழிபட உள்ளேன் இமயமலை சென்ற பின்னா்தான் எத்தனை நாள் அங்கு இருப்பேன் என முடிவு செய்யப்படும் . காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கு தற்போது அது குறித்து பதில் அளிக்க விரும்ப வில்லை . இவ்வாறு அவர் பேட்டியளி்த்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024