Saturday, March 10, 2018

என் கட்சியை கூட நான் எதிர்ப்பேன் : கமல்

Added : மார் 10, 2018 00:57 |




  சென்னை: ''என் வாழ்க்கையை, வாழ்ந்து முடித்து விட்டேன்; இனி, மக்களுக்காக வாழ்வேன். அரசியலில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை,'' என, மக்கள் நீதி மைய தலைவர், கமல் கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு, அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 15 ஆண்டுகளாக, குப்பை ஆட்சி நடக்கிறது. அடுத்த தேர்தலில், எங்கள் ஆட்சி மலர பாடுபடுவேன். எனக்கான வாழ்க்கையை, வாழ்ந்து முடித்து விட்டேன். தற்போது, புதிய வாழ்க்கையை துவக்கியுள்ளேன். பணம் சம்பாதிக்க, நான் அரசியலுக்கு வரவில்லை.

மக்கள் நீதி மய்யம், மக்களுக்கான கட்சி. இனி, அரசியலில் இருந்து பின்வாங்கும் எண்ணமே இல்லை. மக்களுக்காக சேவை செய்தபடியே இறக்க விரும்புகிறேன். நான் ரசிக்கும் விஷயங்களை செய்யும், கட்சி தலைவர்களாக, கருணாநிதி, கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் இருந்ததால், அவர்களை சந்தித்தேன். விரைவில், கர்நாடக முதல்வர், சித்தராமையாவையும் சந்திக்க உள்ளேன்.பா.ஜ., உள்ளிட்ட, எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல. மக்களுக்கு எதிராக செயல்படும், அனைத்து கட்சிக்கும், நான் எதிரானவன். என் கட்சியே, மக்களுக்கு எதிராக செயல்பட்டால், நான் எதிர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024