Saturday, March 10, 2018

ரஜினி, கமல் மீது ராமதாஸ் தாக்கு

Added : மார் 10, 2018 02:10

சேலம்: ''கொள்கை இல்லாமல், நடிகர்கள் கமல், ரஜினிகாந்த், அரசியலுக்கு வருகின்றனர்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
சேலம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகாவில் தேர்தல் விரைவில் வரப்போவதால், பா.ஜ., - காங்., இதை திட்டமிட்டே தள்ளிபோடுகின்றன. தமிழக அரசு, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், பா.ம.க., சார்பில் வரும், 30ல் போராட்டம் நடத்தப்படும். அதேபோல், மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீட்டில் நடக்கும் சதியை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.கட்சி துவங்க வேண்டும் என்றால், கொள்கை மிக முக்கியம். ஆனால், நடிகர்கள் ரஜினி, கமல் எவ்விதமான கொள்கையும் இல்லாமல் அரசியலுக்கு வருகின்றனர். அதனால், மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024