Sunday, March 11, 2018

புதுமையை நோக்கி மண் பாத்திரங்கள்

Added : மார் 11, 2018 01:31

ராஜபாளையம் : மண்பானைகளில் சமைக்கும் போது , நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகி, தரமான உணவு கிடைக்கிறது. உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, அதன் தன்மை மாறிவிடுகிறது. மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. பல நுாற்றாண்டு ஆரோக்கிய சமையலுக்கு மண்பாத்திரங்கள் தான் வழக்கத்தில் இருந்து வந்தது.தற்போது, புதுமையான வகையில் மண்பாண்டங்களால் ஆன பாத்திரங்கள் ராஜபாளையம் தென்காசி ரோட்டில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

உரிமையாளர் சுப்பிரமணியன் ,'' குக்கர், வடை சட்டி, குழம்பு சட்டி, இட்லி குக்கர், தண்ணீர் பாட்டில், ஜக், டீ கப், தோசைக்கல், சாப்பாட்டு தட்டு, பில்ட்டருடன் கூடிய தண்ணீர் கேன் என, மண் பாத்திரங்கள் வைத்துள்ளோம். இவற்றை குஜராத் போன்ற வட மாநிலும், திண்டுக்கல், மானாமதுரை, நகார்கோவில் பகுதிகளிலிருந்து வாங்கி வைத்துள்ளோம்.சுற்றுப்புற சூழலை கெடுக்காத வகையில் அலங்கார பொருட்களான துளசிமாடம், பொம்மைகள், பூ ஜாடி, திருஷ்டி பொம்மை, அலங்கார விளக்குகள், சுவாமி சிலைகள் என அனைத்து பொருட்களும் விற்பனைக்கு உள்ளது'' என்றார். தொடர்புக்கு 94877 76572.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024