ஈரோட்டில் நீர் நிரப்புவதில் சிக்கல் ரயில் பயணியர் திண்டாட்டம்
Added : மார் 11, 2018 00:41
ஈரோடு:ஆற்றில் நீரோட்டம் குறைந்ததால், ஈரோடு வரும் ரயில்களின் பெட்டிகளில் தண்ணீர் நிரப்புவது கேள்விக்குறியாகி உள்ளது.
ஈரோட்டுக்கு தினமும், 60 ரயில்கள் வந்து செல்கின்றன. ஈரோடு வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும், இன்ஜின் மாற்றவும், பெட்டிகளில் தண்ணீர் நிரப்பவும்,ஈரோட்டில் நின்று செல்கின்றன. சில ஆண்டுகளாக, ஜனவரியில் துவங்கி, ஜூலை வரை, காவிரியில் நீரோட்டம் குறைவாகவே உள்ளது. ஆற்றில் நீரை உறிஞ்சி, ரயில் பெட்டிகளில் நிரப்ப முடியாத சூழல் ஏற்படுகிறது. தற்போதும், அது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பயணியர், மறியல் உள்ளிட்ட திடீர் போராட்டங்களில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.ரயில்வே தொழிலாளர்கள் கூறியதாவது:காவிரி ஆற்றில், நீரோட்டம் குறைவாக உள்ளது. லை துாரங்களில் இருந்து வரும் பெரும்பாலான ரயில்களில், அவற்றின் வழித்தடங்களில் தண்ணீர் நிரப்புவது இல்லை. இதற்கு, ஈரோட்டை கைகாட்டி விடுகின்றனர்.
'நீர் இல்லாத சூழலில், ஈரோட்டில் இருந்து கிளம்பும், ஆறு ரயில்களுக்கு மட்டும் பெட்டிகளில் நீர் நிரப்ப முடியும்;பிற ரயில்களுக்கு நீர் நிரப்ப இயலாது' என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்த மூன்று மாதங்களுக்கு, இந்நிலை தொடரும்; தவிர்க்க முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும், குறிப்பிட்ட ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். இதை, ரயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment