Thursday, March 15, 2018

துணை தாசில்தார் அலுவலகத்தில் மரணம்

Added : மார் 15, 2018 01:20

தேவகோட்டை: காளையார்கோவிலைச் சேர்ந்தவர் ராஜாமணி 57. இவர் இரண்டு தினங்களுக்கு முன் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றார். நேற்று காலை அலுவலகத்திற்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்தவுடன் சிறிது நேரத்தில் இருக்கையில் சாய்ந்துள்ளார். உடனடியாக அலுவலர்கள்அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அவரது உடல் காளையார் கோவில் கொண்டு செல்லப்பட்டது. அலுவலக ஊழியர்கள் கூறும்போது, 4 மாதத்தில் ஓய்வு பெற இருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024