Sunday, March 18, 2018

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு

Added : மார் 18, 2018 06:32 | 





  தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கட்டுப்பாட்டில், 10 ஆயிரத்து 300 தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும், அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.இவற்றில், ௮௦௦ தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில், 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ளது. இக்கல்லுாரிகளில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் மூடப்பட்டு, 2018- - 19ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை, நிறுத்தப்படும் என, அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்து, மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், பாடப்பிரிவு மூடப்படாது என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள், ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024