Friday, March 23, 2018

பணியில் சேர வந்தார் 'மாஜி' அனுமதி மறுத்தது பல்கலை

Added : மார் 22, 2018 23:49

கோவை, பாரதியார் பல்கலை ஊழல் புகாரில் சிக்கிய, தொலைதுார கல்வி மைய முன்னாள் இயக்குநர் மதிவாணன், மருத்துவ விடுப்பு முடிந்து, பணியில் சேர வந்த போது, அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த, பிப்., 3ல், பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, பணி நியமன ஊழல் புகாரில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்கலை பேராசிரியர் தர்மராஜ், மனித வள மேம்பாட்டுத்துறை மைய இயக்குநர் மதிவாணன் ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
மதிவாணன், தொலைதுார கல்வி மைய இயக்குநர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வந்தார். எனவே, இவருக்கு வழங்கப்பட்ட கூடுதல் இயக்குநர் பொறுப்பு பறிக்கப்பட்டது; ஒன்றரை மாத மருத்துவ விடுப்பில் சென்றிருந்த இவர், 20ம் தேதி, மீண்டும் பணியில் சேர வந்தார். பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பியது.

பல்கலை பதிவாளர் வனிதா கூறுகையில், ''சாதாரண சூழலில் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தால், மீண்டும் பணியில் சேர்க்க, எவ்வித தடையும் இல்லை.''ஊழல் வழக்கில், இவரும் இடம் பெற்றிருப்பதால், சட்ட ரீதியாக ஆய்வு செய்து, முதன்மை செயலரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்பே, முடிவு செய்ய முடியும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024