Thursday, March 15, 2018

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பல்கலை.ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு

Published : 14 Mar 2018 17:44 IST

பிடிஐ



மேற்கு வங்க மாநில அரசுப் பல்கலை.யின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பல மாணவிகள் அளித்த புகாரின்பேரில் காலவரையற்ற விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் கல்யாணி பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக குற்றச்சாட்டப்பட்டவர் நாட்டுப்புறவியல் துறையின் பேராசியர். அவர் நேற்று கட்டாய விடுப்பில் செல்லும்படி கல்யாணி பல்கலை.யின் துணைவேந்தர் சங்கர் குமார்கோஷ் கேட்டுக்கொண்டதாக பல்கலை.யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

''இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக இந்த ஆசிரியரைப் பற்றி நிறையப் புகார்களை நாங்கள் பெற்றோம்.

அப்போதிருந்தே விசாரணையை தொடங்கினோம். இதற்கிடையில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கள் பற்றி யுஜிசி (பல்கலைக் கழக மானியக் குழு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றோம்.

பின்னர், பல்கலைக்கழகப் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கான பல்கலை.புகார் குழு இதற்கான முடிவை எடுத்தது. மாணவ மாணவிகள் இந்த விஷயத்தைப் பேசவே பயந்தனர். எனவே இக்குழு யுஜிசியின் வழிகாட்டுதலின்படி விசாரணையை வெளிப்படையாக நடத்தியது. மேலும் அவர்

பல்கலைக்கழகம் திரும்புவதற்கான அறிவிப்பு வரும்வரை அவர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024