ரூ. 2 கோடி மதிப்பில் ரூ.10 நாணயம் தேக்கம்
Added : மார் 21, 2018 00:31
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டவில்லை வியாபாரிகள், பஸ் டிரைவர்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், 10 ரூபாய் நாணயம் புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், 10 ரூபாய் நாணயம் வைத்துள்ளோர், வங்கிகளில் செலுத்தி ரூபாய் நோட்டுகளாக பெறுகின்றனர். சில நேரங்களில், வங்கி நிர்வாகமும் வாங்க மறுத்து வருகிறது.இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள, 26 வங்கி கிளைகளில், ஒரு கோடி ரூபாய் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற கிளைகளில், ஒரு கோடி ரூபாய் என, 10 ரூபாய் நாணயங்கள் தேங்கியுள்ளன. இவை வங்கி வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், விழிப்புணர்வு ஏற்படுத்த, 10 ரூபாய் நாணயம் மாற்று சிறப்பு முகாம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். முகாமில், வங்கி நிர்வாகம், 10 ரூபாய் நாணயங்களை பெற்று கொண்டு, ரூபாய் நோட்டுகளாக வழங்குகிறது. மேலும், பொதுமக்கள், வியாபாரிகளிடம், 10 ரூபாய் நாணயங்களை பெற்று கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நேற்று ஏராளமானோர், 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து, ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர்.

No comments:
Post a Comment