Saturday, March 17, 2018

ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்: ஓலா, உபெர் கால் டாக்ஸி டிரைவர்கள் அறிவிப்பு

Published : 16 Mar 2018 16:14 IST

பி.டி.ஐ மும்பை

THE HINDU TAMIL




ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக்கூறி அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்கள் சங்க தலைவர் சஞ்சய் நாயக் கூறியதாவது:

‘‘மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து ஒலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்தன. அவற்றை நம்பி நாங்கள் 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கார் வாங்கியுள்ளோம். ஆனால் அதில் குறிப்பிட்ட தொகையைக் கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை.

வருவாய் அனைத்தையும் அந்த நிறுவனங்களே சம்பாதிக்கின்றன. தங்கள் சொந்த நிறுவனக் கார்களையும், ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கார்களையும் வெவ்வேறு விதமாக அவர்கள் நடத்துகின்றனர். முத்ரா திட்டத்தின் கீழ் வாக்குறுதிக் கடிதம் அளித்துக் கடன் வாங்கித் தந்தனர். ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை உள்ளது.

ஆனால் அவற்றை அவர்கள் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே எங்கள் காரை, கடன் வழங்கி நிறுவனங்கள் பறிக்கும் சூழல் உள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் கால் டாக்ஸி நிறுவனங்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

இதுகுறித்து ஓலா நிறுவனம் பதில் அளிக்கவில்லை. அதே சமயம் வேலை நிறுத்தம் நடைபெற வாய்ப்பில்லை என உபெர் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024